எண்ணி வெட்கப்பட வேண்டும்

நாம் உமிழ்ந்ததை
தானுண்டு நம் உயிர் காத்த
இத்தருக்களிடம் நாம் காட்டிய நன்றியை
எண்ணி வெட்கப்பட வேண்டும்...
அதை பார்த்து பிறஉயிரினங்கள்
காரி உமிழ்கின்றன நம்மை பார்த்து
"உனக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது"
என்று கேட்டபடி...
இருந்தும் மரம்போல் நாம் இருக்கிறோம்
நாம் வீழ்த்திய மரங்களுக்கு பதிலாக...

எழுதியவர் : தமிழ் தாசன் (26-May-17, 10:22 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 2133

மேலே