நகைச்சுவை-காதல் பரிசு

இரு தோழியர்கள் இடையில் நடக்கும் ஒரு உரையாடல்
----------------------------------------------------------------------------------

கமலா : லாவண்யா , உன்னை நேத்தே கேக்கணும்னு நெனெச்சேன்
சரி இப்போ மாட்டிக்கொண்டாயா ............. சொல்லு இப்போ
அப்படி என்னத்தான் பேசுவடி உன் காதலனோடு மெய்மறந்து
கைபேசியில் தொடர்ந்து அரைமணி நேரம்.................

லாவண்யா : ஆதி கமல்..............உனக்கு இதை நான் எப்படி புரியவைப்பேன்
தெரியலையே ......................இதில் நான் பேசுவதில்லை ....
என் காதல் பேசுது..............பேசிக்கொண்டே இருக்கும்........
டாப்-அப் தீரும் வரை...........................

கமலா : புரியலையே லாவு ...............கொஞ்சம் விளக்கின்

லாவண்யா : அதுக்குதான் சொல்லுவாங்க ............இதெல்லாம்
காதலிச்சா தான் தெரியும்னு ......................அடியே ட்யூப் லைட்
என் செல்லுக்கு டாப்-அப் அவன் செலவு ............பேசுவது
என் காதல் .................அப்புறம் என்ன


கமலா : புரியுது இப்போது ............இதுவும் ஒரு காதல் பரிசா ?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-May-17, 4:53 pm)
பார்வை : 569

மேலே