ஹைக்கூ கவிதை -2

ஏழ்மைக்கு நிறுவனங்கள்
தொண்டு ஆற்ற
நிதி எங்கே!

மன்னன் சென்றான்
அரசியல் வாதி வென்றான்
ஏழை நின்றான்!

மருந்துக்கு பஞ்சமில்லை
நோய்க்கு எது எல்லை
உண்மை எது..

இறைவன் இருக்கிறான்
குறவன் கூத்தாட
நாளை யார் இருப்பார்!

தூங்கிய பின் விழிப்பு
என் மனம் தவிப்பு
போராட்டம் எங்கே?..

வாக்கு கொடுத்து வாக்கு கேட்டு
போக்கு காட்டி புறம் தள்ளும்
நடிகன்..

பலகவிகண்ட பூமி
முகநூல் கவி
வழி கேட்டான்!

நல்ல கருத்து வலையில்
ஏதோ கருத்து விற்றது
ஊடகம்..

எவரோ எழுத பிரசுரமானது
தினப்பத்திரிக்கை முகநூல்
திருடன் யார்?..

கட்டுபாடு கற்றேன்
ஒருகோப்பை தேனீர்
கொட்டிவிட்டேன்...

−சிவசக்தி புதுவை

எழுதியவர் : shivasakthi (30-May-17, 5:18 pm)
பார்வை : 206

மேலே