திருமண வாழ்த்து - ஆன்ஸ் ராஜ்

மங்கல நாணேறி மணக்கோலம் பூண்ட அருள்மகளே!
புதுமணம் கொண்டு இருமனம் இணைந்த பூமகளே!
உள்ளமெங்கும் உவகை கொண்டு
எண்ணமெங்கும் எழில் கண்டு
இல்லறம் நுழைந்திருக்கும் வேளை,
இதயம் நிறை அன்போடு
இவ்விதழ் இரண்டும் சிரிக்க
இறைவனை வேண்டி வாழ்த்துகிறோம்!
முத்தான பேத்தியாய், மூத்த மகளாய்!
கண்டிக்கும் தாயாய், கரம்கோர்த்து தந்தையாய்!
நீ நடைபழக்கிய உன் உடன்பிறப்புகளின் உயிர் மடல்!
ஐவரான நாம் இன்று அறுவரானோம், ஐம்பூதங்களும் நம்மைக் கண்டு வியக்க!
கவலையற்று ஓடித்திரிந்த நாட்களும்,
கண்ணீர் மல்க காத்திருந்த நேரங்களும்,
கண்ணுக்குள் பல வண்ணங்களாய் மின்னும்!
விழாக்களுக்காக காத்திருந்து,
விடுமுறை சந்திப்புகளில் மகிழ்ந்திருந்த நிமிடங்களும்,
நினைவில் என்றும் நிழலாடும்!
வாழ்வின் முதல் தோழியும் நீதான்,
எங்கள் உயிர்த் தோழியும் நீதான்!
பிரிவில்லை என்றும் இவ்வுறவிற்கு,
பாசம் என்றும் குறைவில்லை நம் ஐவருக்கு!
நல்ல மருமகளாய்!
நேர்த்தியான மனைவியாய்!
கறையற்ற முழுமதியாய் என்றும் நீ வாழ வாழ்த்துகிறோம்!
இணைபிரியா துணையாய்!
இகத்தில் பல்லாண்டுகள் வாழ
இதய ஆழத்தின் ஆசைகளோடு வாழ்த்துகிறோம்!
உயிரான உறவாய்!
உன்னத நேசத்தோடு உலகில் வலம்வர
உறவுகளோடு கைகோர்த்து வாழ்த்துகிறோம்!
வாழ்க நீங்கள் என்றும் பல்லாயிரமாண்டுகள்!!!
என்றும் அன்புடன்,
சே.பபியோலா ஆன்ஸ்
அ.கிங்ஸ்லி ஆண்டோ
சே.வயோலா வெர்ஜின்
சே.மிலன் மேத்யு