வாழ்க்கையின் அடித்தளம்

வாழ்க்கையின் அடித்தளம் வாழ்க்கையின் முதல் எட்டில் ஆரம்பித்து , இரண்டாம் எட்டில் முடியுமாம் பள்ளி பருவம். கட்டிடத்தின் உறுதி அடித்தளம் அமைக்கும் விதத்தில்தான் தெரியும் அது போல , பள்ளி படிப்புதான் வாழ்க்கையின் அடித்தளமாக அதன் உறுதியை நிலைநிறுத்தும். மஞ்சள் பை என் தோளில் ஊஞ்சலாட , கால்களில் செருப்பின்றி , மதிய உணவை எதிர்பார்த்துதான் பள்ளி சென்றேன் நான். இந்த எளிமையான பள்ளிக்காலத்தில் , நான் கண்ட கனவுகள் மிகப்பெரியவை. அந்த கனவிற்கு உரமிட்டு வளர்த்தனர் என் ஆசிரியர்கள். அதற்கு தோள் கொடுத்தனர் தோழர்கள். பள்ளி பருவத்தில் ஊக்கம் கொடுக்கும் நல்ல ஆசிரியர்களும் , உறுதுணையாக நிற்க நல்ல தோழர்களும் கிடைத்ததோடு வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் வலு கூட்டியது என் பள்ளி பருவமே!

எழுதியவர் : Malathi ranjith (5-Jun-17, 7:59 pm)
சேர்த்தது : Malathi Ranjith
Tanglish : valkaiyin adithalam
பார்வை : 292

மேலே