காதல்,மோகம்
இன்றெல்லாம் தேன் தென்றலாய்
கூடுகின்றார் நட்பென்று சொல்லி
ஆணும் பெண்ணும் -பின்னர்
கொஞ்சி குலாவியப் பின்
சூறாவளியாய் பிரிகின்றார்
காணாமல் போகின்றார்
இவர்கள் காதல் காதலா
இல்லை காமத்தால் எழுந்த
வெறும் மோகம்தானோ ?
காதலின் அர்த்தம் தெரியாதவர்கள் !
ஊடல், சாடல், மோதல் காதலில் சகஜம்
இவை காதலை ஒரு போதும் பிரிப்பதில்லை
உண்மைக் காதலில் பிரிவு
மரணத்தில் தான்-ஆனால்
காமம் தரும் மோகம் முப்பது நாள்தான்