தனிமையின் இனிமை

கனவில் உன் தோழில் சாய்ந்தே தனிமை மறந்தேனடி
உன்னோடு இருந்த ஒவ்வொரு நொடியும் ரசித்தே இன்பத்தில் மிதந்தேனடி
மீண்டும் அந்த நொடிகள் வராதோ என எண்ணியே
என்னவளே உன் மடியில் சாய்ந்தே என் தாய்மடி உணர்ந்து கண்ணயர்ந்தேனடி
தனிமையும் இனிமையாய் உணர்ந்தேனடி முதல் முறையாய்
உன்னோடு உன் நினைவுகளோடு இருந்த அந்த தருணம்