நடப்பு சிந்தனை

நடப்பு!!!! சிந்தனை!!!

மருமகள் நைட்டி போட்டதால் சண்டை வந்த வீடுகளில் எல்லாம், பேத்திகள் லெக்கிங்ஸ் போடுகிறார்கள்!

குழந்தைக்கு டயப்பர் மாட்டிவிடுவது என்பதே, ஆகச் சிறந்த அண்டர்கவர் ஆபரேஷன்!

தான் செஞ்ச தவறை, பொண்டாட்டிகிட்ட மறைக்கிறவன் சராசரி மனுஷன்; தனக்கு ஒரு பொண்டாட்டி இருக்கிறதையே மறைக்கிறவன் பெரிய மனுஷன்!

ரஜினி படம்னா, ரிலீஸுக்குப் பிறகு பஞ்சாயத்து. கமல் படம்னா, ரிலீஸுக்கு முன்னாடியே பஞ்சாயத்து. அம்புடுதேன்!

“உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா?” என சண்டையில் கேட்பவர்கள், தெரிந்திருந்தும் ஏன் பழகினார்கள் என்றுதான் தெரியவில்லை!

OMR -ல சம்பாதிக்கிறதை ECR-ல செலவு பண்றாங்க!

குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் பொம்மைகளை அழவிடுவது இல்லை!

ஆண்களின் பெருமையான குறைகளில் ஒன்று... ‘அன்பாக இருக்கத் தெரியும்; ஆனால், யார் மீதெனத் தேர்ந்தெடுக்கத் தெரியாது!’

ஒரு நடிகர் நாலு பொண்ணுங்களோடு ஆடினா, அது ‘ஓப்பனிங் சாங்’காம். அதே ஒரு நடிகை நாலு பசங்களோடு ஆடினா, அது ‘அயிட்டம் சாங்’காம். ஆணாதிக்கச் சமூகம்!

கரப்பான் பூச்சியைப் பார்த்தா பயப்படுறாங்க... அவ்ளோ பெரிய கரடி பொம்மையைக் கட்டிப்பிடிச்சுத் தூங்குறாங்க. என்ன டிசைனோ தெரியல!

இறந்துவிட்ட ஒரு நண்பனின் பெயரை அலைபேசியில் இருந்து அழிப்பதற்கு, ஒரு கொலை செய்வதற்கான துணிச்சல் தேவைப் படுகிறது.

நம்மதான் விளம்பரம் போடுறப்பல்லாம் சேனலை மாத்திடுறோமே... அப்புறம் ஏன் இவ்வளோ செலவு பண்ணி விளம்பரம் பண்றாங்க?

சண்டையின்போது அலைபேசியை யார் முதலில் துண்டிக்கிறார்கள் என்பதில் இருக்கிறது... யாருக்கு யார் அடிமை என்பது!

சத்தியமா நம்மளை உள்ள விடமாட்டாங்க’னு சின்ன காக்காமுட்டை சொல்றது ஞாபகம் வரும்... மேட்ரிமோனி சைட்ல சில பெண்கள் புரொஃபைல் பார்க்கும்போது!

முன்னர் எல்லாம் மழைக்காலம் என ஒன்று இருந்தது. இப்போது மழை நாட்கள் மட்டுமே!

Fact என்னன்னா, 88% மனைவிகளுக்கு தன் புருஷனோட ஃப்ரெண்ட்ஸைப் பிடிக்காது. 98% கணவன்களுக்கு தன் மனைவியோட ஃப்ரெண்ட்ஸை ரொம்பப் பிடிக்கும்!

ஆன்லைனால் மிச்சமான நம் நேரத்தை, ஆன்லைனிலேயே செலவழிக்கிறோம்!

நம்ம வீட்ல 24 மணி நேரமும் டி.வி ஓடிட்டே இருந்தாலும் கண்டுக்காத நாமதான், சலூன்ல வாயைப் பிளந்துகொண்டு பார்த்துட்டு உட்கார்ந்திருக்கோம்!

யாரும் இல்லாதபோதும் குழந்தைகள் காதுக்குள் வந்தே ரகசியங்கள் சொல்கிறார்கள்!

பொதுவாக எந்தப் பெண்ணைக் கேட்டாலும் ‘எனக்கு மழையில நனையிறது ரொம்பப் புடிக்கும்’னு சொல்வாங்க. ரோட்ல பார்த்தா, ஒரு பக்கியையும் காணோம்!

முதல்ல நீதியை வாங்கினாங்க; இப்ப சத்யம்; இன்னும் நேர்மை பாக்கி இருக்கே!

வீட்டில் ஒருவரை மொபைலில் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் ஏதோ ஆபத்தில் இருப்பது போன்ற பிரமை வருகிறது.

டெக்னாலஜி மனஅழுத்தம் தருகிறது!

‘ஏன் எங்கிட்ட பேசல?’னு ஆரம்பிச்சு, பேசாம இருந்ததுக்காகச் சண்டைபோட்டு, அதுக்குத் தண்டனையா நம்மகூடப் பேசாம இருக்க பெண்களால் மட்டும்தான் முடியும்!

அஜித் - விஜய் ரசிகர்கள், அமெரிக்காவுக்குத் தெரியாமல் சண்டை போடுங்கள். தெரிந்துவிட்டால், ஆயுத சப்ளையை ஆரம்பித்துவிடுவார்கள்!

ஒருகாலத்தில் நல்லா ஆங்கிலம் பேசறவங்களை வியந்து பார்த்த நாம, இப்ப நல்லா தமிழ் பேசறவங்களை வியந்து பார்க்கிற நிலைமைக்கு ஆளாகிட்டோம்!

ஒருவன் தன்னைவிட்டு விலக மாட்டான் என்று உறுதியாகத் தெரிந்த பிறகு, அவனை இந்தப் பெண்கள் படுத்தும்பாடு இருக்கிறதே... அம்மம்மா அய்யய்யோ!

அப்பாக்கிட்ட காசு இல்லம்மா எனும் சொல் கேட்டு அழகாகத் தலையாட்டும் மகளின் புரிதல், தந்தைக்கு சோகமய மானது!

`வீட்ல இருக்கும்போதுகூட வேலை செய்யணுமா?’ `
.
வீட்ல இருக்கும் போதாவது வேலை செய்’ - அம்மா நோட்ஸ் ஆல் டீட்டெய்ல்ஸ்

காசு கொடுத்து கடவுளைப் பார்த்து, கடவுளுக்கும் காசு கொடுத்து, கடைசியில கடவுள்கிட்டயே காசு வேணும்னு கேட்கிறவன்தான் மனிதன்!

எழுதியவர் : (11-Jun-17, 1:33 pm)
சேர்த்தது : ஜெகன் ரா தி
Tanglish : natppu sinthanai
பார்வை : 311

மேலே