நம்பிக்கை

நீ என்னருகில் இருக்கிறாய்
என்ற உணர்வு போதும்
ஒரே வீதியிலோ
ஒரே ஊரிலோ
இருக்க வேண்டும் என தேவையில்லை
கண்டங்கள் பல கடந்தாலும்
என் காதல்மீது நம்பிக்கையுள்ளது
காலங்கள் பல கடந்தாலும்
என் காத்திருப்பு வீணாகாது என்ற
நம்பிக்கையில் காத்திருக்கிறேன்

எழுதியவர் : சுமதி (14-Jun-17, 6:16 pm)
சேர்த்தது : sumathipalanisamy
Tanglish : nambikkai
பார்வை : 65

மேலே