வேசி கொடுத்த பிரியா விடை
வாசலைத் திறந்து
வரவேற்றாள் வேசி !
சொம்பிலிருந்த கங்கை நீரை அவள் மேல்
தெளித்து தூய்மை ஆக்கினான் புனிதன் !
திரும்பிச் செல்லும் போது எஞ்சியிருந்த
கங்கை நீரை அவன் மேல் தெளித்து
உனது பாவமும் கழுவப் பட்டது
கங்கைச் சொம்புடனும் காசுடனும்
நாளையும் வா என்று
பிரியா விடை கொடுத்து அனுப்பினாள் வேசி !
----கவின் சாரலன்