ஜுனில் பிறந்த என் ஜுவன்

ஜூனில் பிறந்த என் ஜுவனே
வானில் மிதக்கும் குளிர்மேகமே
ஊண்உயிரை உருக்கும் நாதமே
வாழ்த்துவேன் என்றும் நானுமே

கவலைகள் என்னை சூழ்ந்தாலும்
தோல்விகள் தீயாய் சுட்டாலும் என்
வாழ்வின் கரைகள் உடைந்தே விட்டாலும்
என் மூச்சுக் காற்றில் நீ இருப்பாய்
என் ஜுவனை நித்தம் குளிர்விப்பாய்

கடவுளை தேடி நான் தோற்றேன்-அதையுன்
கண்ணில் துகளாய் பின் கண்டேன்
காதல் வலையில் நான் விழுந்தேன்-எதிர்
காலம் நீயென தான் உணர்ந்தேன்

ஏ கள்ளி...எனக்குள் எல்லாமுமாய் நீயே இருக்கிறாய்
எல்லா செல்களின் செயலையும் நீயே செய்கிறாய்
ஹார்மோன்களை ஹாலிடேயில்
அனுப்பிவிட்டாய்...

நடக்கிறேன்...தென்றலாய் என் தோல் தொடுகிறாய்..
குளிக்கிறேன்...குளிர் நீராய் என் உடல் நிரம்புகிறாய்...
துயில்கிறேன்..தூக்கத்தின் தூரப் புள்ளியில் நீயே அணைக்கிறாய்...

உன் சிரிப்பொலியில் சிலிர்த்துப்போகிறேன்...
உன் முத்தத்தில் செத்தே போகிறேன்...
உச்சி நுகர்கையில் மீண்டும் உயிர்த்தெழுகிறேன்....

வசந்தத்தின் பூங்கொத்தோடு
வாழ்த்துகிறேன்...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

-தாஸ்

எழுதியவர் : அ.நா.தாஸ் (17-Jun-17, 10:17 pm)
சேர்த்தது : வைரமுத்து தாசன்
பார்வை : 82

மேலே