அப்பா
அப்பா
என் தாய் தந்த முதல் அறிமுகம்,
நான் பெற்ற முதல் அங்கீகாரம்,
நாங்கள் கட்டிலில் தூங்குவதற்காக
காலம் மறந்து உழைப்பவர்,
கண்ணீரை மறைத்து என் கனவுகளை வளர்த்தவர்,
கவலைகள் நெருங்கா வண்ணம் கண்இமைபோல் காத்தவர்,
ஒழுக்கத்தை கற்றுவித்த ஒப்பற்ற ஆசான்,
உரிமையுடன் கூடிய உன்னதமிக்க உறவு முறை.