தந்தைப் பாசம்

உம் கரு நான் உம்மை காணவில்லை
உறவில் இந்த உருவே காணவில்லை
சொந்தங்கள் பல வந்திடினும்
தந்தை போல் யாரும் இல்லை
எமக்காக உழைப்பில் எந்திரமானாய்
மழலையாய் எமைக்கண்டு மார்பில் சுமந்தாய்
அன்பைப் பொழிந்தாய் அரவணைத்தாய்
என்பை முறித்து எமக்காக சுகம் ஈந்தாய்
உருக் கொடுத்து எமைக்காத்த தந்தையே
உமக்கு ஈடாக உலகினிலே யாருமுண்டோ

அஸ்லா அலி

எழுதியவர் : aslaaali (18-Jun-17, 1:16 pm)
பார்வை : 912

மேலே