வெரட்டு கோழியா

பொன்னி ஊருக்கு எப்படீ வந்த?
😊😊😊😊😊
நான் வந்து மூணு நாளு ஆகுதுங்க பாட்டிம்மா. நீங்க நல்லா இருக்கறீங்களா?
😊😊😊😊😊😊
எனக்கென்னடி, இது தோட்டத்தில ஒழச்ச ஒடம்பு. இன்னும் தோட்ட வேலைங்க எல்லாத்தையும் செய்வேன். இன்னும் நான் நாலு பேரு கண்ணுப்படற மாதிரி குத்துக் கல்வாட்டம் இருக்கறண்டி பொன்னி.
என்னடி நீ கவர்ச்சி நடிகை மாதிரி உடை அணிஞ்சிட்டு இருக்கற?
😊😊😊😊😊😊😊
இதாங்க பாட்டிம்மா இப்ப படிச்ச தமிழர்களோட நாகரீகம். பட்டிக்காடும் இப்ப திரைப்பட மோகத்தில கேட்டுத்தானே கெடக்குது.
😊😊😊😊😊
நீ சொல்றது சாமி சத்தியமா உண்மைதான்டி பொன்னி. அது சரி
உங் கையப்பிடிச்சுட்டு வர்றானே அந்தப் பையன் யாரு?
😊😊😊😊😊
அவன் என்னோட அண்ணன் பையன். பையம் பேரு விராட் கோஹ்லி.
😊😊😊😊😊
என்னது, வெரட்டு கோழியா இல்ல வெரட்டு கோலியா? இதென்ன பேருடீ?
😊😊😊😊😊
பாட்டிம்மா என்னோட அண்ணியும் அண்ணனும் பெரிய மட்டைப் பந்தாட்ட வெறித்தனமான ரசிகர்கள். இப்ப இந்திய அணிக்கு தலைவரா இருக்கற விராட் கோஹ்லி பேரையே அவுங்க பையனுக்கு வச்சுட்டாங்க பாட்டிம்மா.
😊😊😊😊
என்ன இருந்தாலும் நாம பேசற மொழில பேரு வைக்கறதுதாண்டி நமக்குப் பெருமை. சரி ....சரி. எல்லாம் காலங் கெட்டுப் போச்சு. எதுவும் சொல்லறதிக்கில்ல.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Virat = huge, massive, giant
Kohli = sub-caste name in Punjab.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@@@@@@@@@@@@@@@@@@@@@
திரைத் தமிழ், தமிழின் சீரழிவு.
😊😊😊
திரைத் தமிழைப் பயன்படுத்துவது கற்றோர்க்கு அழகல்ல.
😊😊😊😊
தாய் மொழியைச் சீரழிப்பது தாயை கொடுமைப்படுத்துவதற்குச் சமம்.
😊😊😊😊
தமிழ் பிற மொழிகளைப் போல கலப்பட மொழி அல்ல.
😊😊😊😊😊😊
கடனாகப் பெற்ற பிறமொழிச் (loan words)சொற்களை உதறித் தள்ளினாலும் தமிழைப் பயன்படுத்த முடியும்.
😊😊😊😊😊😊
தமிழ், சமஸ்கிருதம் தவிர வேறு எந்த இந்திய மொழிக்கும் இந்தத் தகுதி கிடையாது
😊😊😊😊😊😊😊
மொழிவெறி இன்றி மொழியியல் கற்றவர் அறிந்த உண்மை இது.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@@@@@@@@@@@@@@@@@@@@@@சிரிக்க அல்ல. --> சிந்திக்க.

எழுதியவர் : மலர் (18-Jun-17, 4:01 pm)
பார்வை : 315

மேலே