அப்பா

கருவில் சுமக்கா தாய்
தான் தந்தையும்

பிறக்கும் தருணத்தில்
தாயைவிட அதிகம்
துடித்தவனும் நீயே

மார் இட்டு வளர்த்ததும்
நீயே

தோளில் தூக்கி துமந்ததும்
நீயே

என் கிறுக்கலை நீ
ஒவியம் என்பாய்

என் மழலை மொழியை நீ
கவிதை என்பாய்

உரத்த குரலும்,
மரத்த விரலும்

வியர்வை வரியும்,
நேர்மை நெறியும்

உனது அடையாளம்

வெளி காட்டா அன்பும்
கட்டுபடுத்திடா
கட்டுப்பாடுகளும் உன்
கைவண்ணம்

கற்பனைக்கு எட்டாத
நாட்கள் தான் நீ கை பிடித்து
நடைபழக்கிய நாட்கள்

விற்பனைக்கு எட்டாத
நிமிடங்கள் தான்
உன் தோளில் தாங்கிய
நிமிடங்கள்

உனக்கு எட்டா ஏட்டு
கல்வியும் எனக்கு
கிடைத்ததும் உன்னால்

முயன்றால் உன்னால்
முடியும் என்பாய்

தோல்விகள் துளைத்தால் நீ
துணையாய் வருவாய்

நம்பிக்கை விதையாய் என்
மனதில் நிறைவாய்

என் எண்ணமும் ஏக்கமும் நீ
சொல்லாமல் அறிவாய்

நீயும் இன்றி நானும் இல்லை

இல்லை என்றும் நீ சொன்னது
இல்லை

உனக்கு என ஒன்றும் நீ
வாங்கியதும் இல்லை

ஒய்வு என நீ உட்கார்ந்ததும்
இல்லை

இறுதிவரை உழைத்தாய்
இயந்திரமாய் எனக்காக

வேலைக்கு வெளியூர்
செல்கையில்
வலியோடு வழியில்லாமல்
அனுப்பி வைத்தாய்
என்னை .....

எழுதியவர் : யோபாலா (18-Jun-17, 4:41 pm)
சேர்த்தது : பாலாசுப்ரமணி மா
Tanglish : appa
பார்வை : 101

மேலே