தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

மனதில் தாங்கி
தோளில் தூக்கி
ஆசையாய் முத்தமிட்டு
நடை பழக்கி
அம்பாரி ஏற்றி
உப்புமூட்டை சுமந்து
அகிலம் அறிமுகங்காட்டி
திமிறல்கள் கொட்டி
அறம் புகட்டி
அணைப்பில் சீராட்டி
நல்வழி நடத்தி
தோழனாய் திட்டி
ஆசானாய் வழிநடத்தி
திசைகள் காட்டிய
அன்பு தந்தைக்கு
இனிய தந்தையர்
தின நல்வாழ்த்துக்கள்


தந்தையாய் விளங்கும் அத்தனை நல் உள்ளங்களுக்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் 😊

எழுதியவர் : அருண்மொழி (18-Jun-17, 7:08 pm)
பார்வை : 451

மேலே