என்னவளுக்காக ஒரு சேதி

உன்னிடம் உண்மை சொல்ல வேண்டுமடி...
உன்னைப் போல் என்னை நேசித்தவர் யாரும் இல்லையடி...
உன்னுள் நான். என்னுள் நீ..
எனக்கு தெரியும், நான் தனியாக இல்லையடி, உன் நினைவுகள் என்னோடிருப்பதால்...
உன் சிரிப்பில் என் சோகங்களெல்லாம் மறந்து மகிழ்கிறேனடி...
உன் நினைவுகளில் இருள் நீங்கி மனோபலம் பெறுகிறேனடி...
நீயே காரணமாய் இருக்கிறாயடி என் வாழ்வில் சாதிக்கவும், தொடர்ந்து உயிர் வாழவும், காயங்களெல்லாம் மறக்கவும்...

உன்னால் நான் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளேன் என்பது பெரிய விடயமில்லையடி...
நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேனடி என்னால் உத்தமமாக வாழ முடியும் என்று...
நான் எப்போதும் உன்னை நேசிப்பேனடி.
இதுவே எனது சத்தியமடி...

சேர்ந்து சாப்பிட்ட நாட்கள் இப்போது தவறவிட்டதாக உணர்கிறேனடி.
நான் குடும்பத்திற்காகக் கடினமாக உழைப்பேனடி..
என்னால் முடித்ததை சேய்வேனடி அவர்களிடம் சந்தோஷம் ஏற்பட...
எனக்கு தெரியும், நீ அங்கே அவர்களுக்கு வழிகாட்டி, நம்பிக்கையூட்டி நல்வழிப்படுத்துவாயடி.
அதற்காக நான் உனக்கு நன்றி சொல்ல வேண்டுமடி.
அதோடு நானும் உன்னைப் போல இனியுள்ள கொஞ்சக் காலமாவது வாழ விரும்புகிறேனடி....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (20-Jun-17, 2:01 pm)
பார்வை : 1017

மேலே