திரையும் அரசியல் மாயையும்

திரையில் தவறுகளை இயக்குனர் மற்றும் கதாசிரியர் வழிகாட்டுதலில் தட்டிகேட்பதுபோல்..நிதர்சனத்தில் அரசியலில் நுழைந்து தன்னிச்சையாக அந்த நடிகர் தட்டி கேட்டு சமூக அமைப்பை சீர்திருத்துவார் என்று எண்ணும் ரசிகர்களின் மூடத்தனமே அந்த நடிகர்களின் அரசியல் மூலதனம்.

நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பது என் நிலைப்பாடல்ல ஒரு ஜனநாயக நாட்டில் எவர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் மக்களுக்கு நன்மை செய்யலாம் தவறில்லை. ஆனால் ?இப்பொழுது இருக்கும் சமூக பிரச்சினைகளில் அவர்களின் நிலைப்பாடு என்ன? அதற்கான தீர்வுகள் அவர்களிடம் உள்ளதா? என ஆராயாமல் திரையின் மாயையில் உழன்று அவர்களை தலைவர்களாக ஏற்றுக்கொள்ளும் அளவிற்க்கு என் தமிழ் சமூகம் தன்னிலை தாழ்ந்து விடவில்லை என்ற நம்பிக்கை இன்றும் நமக்கு இருக்கிறது.

இதை கூறியவுடன் என் கருத்திற்கு மாற்று சிந்தனை அபிநயவிப்பவர்கள் MGR, கலைஞர் மற்றும் ஜெ. வை முன் வைப்பார்கள்.அவர்கள் எடுத்த உடனேயே அரசியல் செய்யவில்லை பதவிக்கு வருமுன் தோரயமாக குறைந்தது இருபது வருடங்களாக அரசியல் அடிநாதம் தொட்டு தேறி வந்தவர்கள்.அதற்காக அவர்களது ஆட்சியில் தமிழகம் முழுவதுமாக முன்னேறிவிட்டதா என்றால் நிச்சயம் அதில் இருவேறு கருத்துக்கள் எனக்கும் உண்டு.

நடிகனை தலைவனாய் ஏற்று அவன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி மகிழும் என் சகோதர தமிழினத்தில் எத்தனை பேருக்கு அவர்களது பெற்றோரின் பிறந்தநாளாவது தெரியும் என்பது ஐயமே!

நடிகர்களையும் அவர்களின் திரைப்படங்களையும் ரசியுங்கள் தவறில்லை.. ஆனால் அவர்களின் கொள்கைகள் சமூக நிலைப்பாடு போன்றவற்றை புரிந்து கொண்டு தலைவனாக்குங்கள்.

மீண்டும் ஒருமுறை நம் சென்ற தலைமுறை செய்த ஒருதலை வழிப்பாட்டு தவறை செய்துவிடாதீர்கள். என் தமிழ் சமுதாயம் இன்றும் தன் நியாயமான உரிமைகளுக்காக உயிர் தந்து போராடுவதுபோல் அடுத்த தலைமுறையையும் போராடவிடாமல் காக்க வேண்டியது நமது கடமை.

பி.கு. இது அனைத்து நடிகர்களின் ரசிகர்களுக்குமான வேண்டுகோள் யவரையும் குறிப்பிட்டல்ல......நானும் ஓர் நடிகனின் ரசிகனே தலைவனின் ரசிகனல்ல.....

எழுதியவர் : சுரேஷ் குமார் (22-Jun-17, 11:38 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 149

சிறந்த கட்டுரைகள்

மேலே