வெற்றி நிச்சயம்

போராடும் குணமிருந்தால்
போர்க்களமும்
உன் தெருவாகும்...

பொதுநலம் கொஞ்சம் கலந்திருந்தால் உன் தெருகூட பூந்தோட்டமாகும்...

தயக்கங்கள் உன்னை
முடக்கித் தனியறையில்
சிறை வைப்பதா?

வருங்கால சந்ததிக்கு
உனது வரலாற்றில் நீ
குறை வைப்பதா?

வானம்தான் உன்
எல்லையென்றால் அதையும்
தான் பார்த்துவிடு...

தடமெல்லாம்
தடையென்றால்
தகர்த்தெறிந்து வீசிவிடு...

போகுமிடம் புதியதுதான்
நாளைஅது உன்
கால்தடத்தின் முகவரிதான்...

தோல்விகள் உன்னிடம்
துவலும் வரை
முயற்சியால் மட்டும்
மூச்சு விடு...

சோர்வுகள் வாழ்வினை சிதைத்தாலும்
ஓய்விலும் வெற்றியை
நினைத்தே இளைப்பாறி விடு...

ஆயிரம் வாய்கள்
உன்னைக் குறைகூறும்
நிச்சயம் உந்தன் வெற்றி ஒரு நாள் அவர்களின் செவி சேரும்...

எழுதியவர் : ராஜ் சரண் (26-Jun-17, 12:16 pm)
சேர்த்தது : ராஜ் சரண்
Tanglish : vettri nichayam
பார்வை : 4482

மேலே