பணம்

நெடுங்காலம் போராடி...
வென்று விட்டேன்...நான்!

உதிரம் இருந்தும்...
உறைந்துபோன என் எழுதுகோலை...
எழுப்பிவிட்டேன்!

பூட்டிக்கிடந்தது...
மைக்குச்சியின் மூக்கு மட்டும் அல்ல!
என் மனதும்தான்!

என் எண்ணங்களுக்கு இன்று
விடுதலை!
விழுந்த இடத்தில தானே எழ முடியும்?

எழுந்துவிட்டேன் நான்!

மதியை மறைத்திருந்த விதியை
துறந்துவிட்டேன்..
அல்ல
துரத்திவிட்டேன்!

சுருங்கிக்கிடந்த என் மூளைக்கு..
இது நல்லதொரு சலவை தான்!
அழுக்குடன்...
அழுகையும்..
தொலைந்து போனதால்!

ஓட்டை உடைத்துக்கொண்டு...
உலகத்தை எட்டிப்பார்க்கிறேன்...
அட..
நாற்றம் பொறுக்க வில்லை!

மகேசனும் மக்கிப்போவான்..
மனித எச்சங்களால்!

மர நிழலை..
மண்ணுக்குள் புதைத்து விட்டு..
அலுமினியக் கூரையினுள்...
அடைக்கலம் தேடும்..
அதிசியக் கூட்டம்!

உலை கொதிக்கும் வரை...
பொறுமை இல்லை..
அரிசியை..
அப்படியே அரைத்துண்ணும்
மனிதப் பிணங்கள்!

அய்யோ..
அரைகூவல்கள்..
அதிகமாய் இருக்கிறதே..
ஆதிக்காலம்
அரங்கேறி விட்டதோ?

மனித
அடையாளம் மாற்றிபோனது!
எப்போது?

மண்டை ஓடுகளில்
புதிதாய் ஒரு சுயநல ரேகை...
காலம் கீறி விட்டதா?
இல்லை
அவனே கீறிக்கொண்டானா?

அடப்பாவமே...
என்ன அது?

பிணத்தின் நெற்றியில்..
அந்த
ஒற்றை ரூபாய்..
என்ன செய்கிறது?

உறைந்து போன..
அவன்
குருதியை..
குடைந்து குடிக்கிறதோ?

பிணம் தின்னும் பணமே!
பூவாடை உடுத்திய..
நார்த்தலை சிங்கமா நீ?
மனித மாமிசம் தான் உன்
பிரதான உணவா?

உன்னைத்
தன் பையினுள் அடக்க நினைத்து..
இறுதியில்..
மண்ணுக்குள் அடங்கிப்போகிறானே...
மனித மிருகம்!

பிணம் புசிக்கும் பணமே!
சற்று நிறுத்து....
ஆறடி நிலமில்லாது...
அல்லாடும் இந்தப் பிணத்தைப்பார்!

புதியதாய் புதைக்க
இனி
வேறு பூமி இல்லை பிணமே…
எரிந்த்து போ!
உன் விதி அதுவே!

சிரித்த காந்தியே!
உனக்கும் நீயே சிதை மூடிக்கொள்!
இனியாவது மனிதம் மாளட்டும்..
மனிதனாய்!

வெற்றித் தீயுடன்!
கோ. கோ

எழுதியவர் : GOKUL PRASAD GOPALAN (27-Jun-17, 6:25 pm)
Tanglish : panam
பார்வை : 277

மேலே