சச்சி - மச்சி

ஏண்டியம்மா மருதாணி, பட்டணத்துக்கு படிக்கப் போனதுக்கப்பறம் சினிமாக்காரிங்க மாதிரியே ஆடை உடுத்த ஆரம்பிச்சிட்டயே. உம்.. படிச்சவங்களாலதாண்டி பட்டிக்காட்டு சனங்களும் கெட்டுப்போறாங்க.
😊😊😊😊😊
வணக்கம் பாட்டிம்மா. உங்க காலம் மாதிரி இல்ல. பட்டிக்காடே இப்ப சினிமா மோகத்தில தான் கெட்டுக் கெடக்குது. நம்ம கிராமத்தில பாருங்க. பள்ளில படிக்கற பெண் கொழைந்தங்க இருபது பேரு இருக்கறாங்க. அதில நாலு பிரியா, நாலு ஸ்வேதா, மூணு ஸ்வர்ணா, ரண்டு ஸ்மிதா, ரண்டு ரேக்கா, மூணு தண்யா, மிச்சம் ரண்டில ஒண்ணு பிருந்தா, இன்னோண்ணு அனுஷ்கா. இந்த இருபது பேர்ல ஒரு பெண் கொழந்தையோட பேருகூட தமிழ்ப் பேரு இல்ல. இப்பெல்லாம் இந்திப் பேர வச்சுக்கறதும், சினிமாக்காரங்க மாதிரி ஆடை அணியறதும், முடியலங்காரம் பண்ணிக்கறதும் தான் பாட்டிம்மா நாகரீகம். எல்லாம் சினிமா மோகம். இந்த லட்சணத்தில என்னவோ சினிமா தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடற மாதிரி படத்தோட பேரு தமிழ்ப் பேரா இருந்தா சலுகை. கலப்படத் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடறாங்களே அதுக்கு.
😊😊😊😊😊
சரிடீ மருது உன்னோட அக்காவுக்கு மொதப் பிரசவத்திலேயே ரண்டு பொண்ணுங்க பொறந்திருக்கறதாக் கேள்விப்பட்டேன். உன் அக்காவும் கொழந்தைகளும் நலமா? கொழந்தைகளுக்குப் பேரு வச்சுட்டாங்களா?
😊😊😊😊😊
மூணு பேரும் நலமா இருக்கறாங்க பாட்டிம்மா. ஒரு கொழந்தை பேரு மச்சி. இன்னோரு கொழந்தை பேரு சச்சி.
😊😊😊😊
இதென்னடி பசங்க ஒருத்தர ஒருத்தரு ' என்னடா மச்சி, வாடா மச்சி, போட மச்சி ' ன்னு பேசிக்கற மாதிரி கொழந்தைங்களுக்குப் பேரு வச்சிருக்காங்க. அந்தப் பேருங்களுக்கு அர்த்தம் என்னடி.
😊😊😊😊😊😊
பாட்டிம்மா, இந்த ரண்டு பேருங்களும் ஜப்பானிய மொழிப் பேருங்க. மாமா ஜப்பான் நாட்டுத் தலைநகரான டோக்கியோவில் உள்ள இந்தியத் தூதரகத்தில வேல பாக்கறாரு இல்லையா? அதனால ஜப்பான் மொழிப் பேருங்கள வச்சுட்டாரு. நமக்கு ஜப்பான் மொழியும் இந்தியும் ஒண்ணுதான். ஏன்னா ரண்டு மொழிகளுமே நமக்குத் தெரியாது. அந்தப் பேருங்களுக்கு என்னவோ அர்த்தம் சொன்னாரு. மறந்து போச்சுங்க பாட்டிம்மா.
😊😊😊
எல்லாம் காலம் கெட்டுக் கெடக்குதடி மருது. தாய் மொழில பேரு வைக்க வெக்கப்படறவங்க நம்ம தமிழர்களத் தவிர வேறு யாரும் இருக்கமாட்டாங்கடி. லட்சக்கணக்கான இந்திக்காரங்க பல தலமுறையா தமிழ் நாட்டில
வாழ்ந்திட்டு இருக்கறாங்க. அவுங்கள்ல ஒருத்தருகூட தன்னோட கொழந்தைக்குத் தமிழ்ப் பேர வைக்கல. அவுங்களப் பாத்து நம்ம தமிழ் சனங்க திருந்தணும்டி மருது. தாய்கூட கடசி வரைக்கும் நம்மகூட இருக்கமாட்டா. ஆனா தாய்மொழி நம்ம உயிர் பிரியறவரைக்கும் நம்மகூடத்தாண்டி இருக்கும். இத படிச்சவங்களே புரிஞ்சுக்காதபோது நம்ம படிக்காத சனங்க என்ன செய்வாங்க?
😊😊😊😊
நீங்க சொல்லறதும் சரி தாங்க பாட்டிம்மா. சினிமாக்காரங்கள தெய்வமா கும்பிட்டு அவுங்க படத்துக்கு பாலாபிசேகம் பண்ணும் புண்ணியவான்கள் வாழும் புனித பூமி தமிழ் நாட்டிலதானே நாம வாழ்ந்திட்டு இருக்கிறோம்.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Sachi= girl child of bliss
Machi= fortunate one
@@@@@@@@@@@@@@@@@@@
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

சிரிக்க அல்ல. சிந்திக்க.

எழுதியவர் : மலர் (28-Jun-17, 8:07 pm)
பார்வை : 220

சிறந்த நகைச்சுவைகள்

மேலே