கவின்மிகு காட்சியிது

எண்ணத்தை வண்ணமுடன்
வடித்திட்ட ​ஓவியமா !
தூரிகையின்றி வரைந்திட்ட
இயற்கையின் எழிலா !
தனிமையை இனிமையென
உணரவைக்கும் இடமா !
நீலக்கடலும் தொடுவானும்
இணைகின்ற இடமிதுவா !
மலையளவு மனவருத்தமும்
மறைந்திடும் மணற்பரப்பா !
முடிவுகளை முடிவெடுக்க
உதவுகின்ற கடற்கரையா !
கவிதைக்கு கருவாக்கிய
கவின்மிகு காட்சியிது !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (29-Jun-17, 7:36 am)
பார்வை : 133
மேலே