மனுசன் இனி மண்ணுக்கு இல்ல

பல்லவி

அழகான முகத்த கொஞ்சம் காட்டினாத்தான் என்ன
அன்பால ஆயுச கொஞ்சம் கூட்டினாத்தான் என்ன
எடுத்துக்காட்டு காதலுக்கு பேர கொஞ்சம் கொடுக்கட்டா
எடுத்துப்போறேன் ஊர விட்டு டாட்டா கொஞ்சம் காட்டட்டா


சரணம்-1

வானப்பூ ஒளியான
வாழப்பூ விழியான
மாறாப்பு விலகாத
மாதுள கனியான
சிரிக்கிற சத்தம் நிறுத்தட்டா
சிற்பி நான் உசிர ஊத்தட்டா
ஊர்க்காத்துல உசிரால பறப்போம் வா
மலை மேட்டுல காட்டுல மகிழ்வோம் வா
சுருக்கு பைக்குள் சுவாசம் வைத்து
அனுப்புகிறேன் முகவரி சொல்
வாங்கிக் கொண்டு
காதலன் வாசல் வந்து செல்

சரணம்-2

கோயிலுக்கு வழியான
கோலப்பூ போலான
மொட்டுப்பூ முந்தாண
கட்ட வேணும் செவ்வாள
மாட்டுக் கொம்பு மூக்கால
முட்டு போடு தாடி தோப்போட
வட்டிக்கு வட்டி போட்டு
கூட்ட போறேன் ஆயுசு
இனி எந்த காதலுக்கும்
மரணம் இல்ல
மனுசன் இனி மண்ணுக்கு இல்ல

எழுதியவர் : செ.பா.சிவராசன் (2-Jul-17, 9:44 am)
சேர்த்தது : செ.பா.சிவராசன்
பார்வை : 98

மேலே