திசுக் கயிறு - வினோதன்

திசுக் கயிறு

முன்னுரையின் முடிவுரையும்
முடிவுரையின் முன்னுரையும்
முத்தமிட்டுக் கொண்ட
புள்ளியில் பூத்திருந்தது
அந்த திசுத் பிஞ்சு !

வாய் வளரும் முன்னமே
உணவூட்டும்
உறவுப் பாலமது
தாயின் குருதி பாலமுது !

பாசக் கயிறே - சமயங்களில்
பாசக் கயிறாய்
உருமாறி சிசுவுண்டு
எட்டு திசைக்கும்
எட்டாத திசையின்
வலி வாரிக் கொணரும் !

எரிக்கப்படுவதும்
எறியப் படுவதும் விதி !
உலர்ந்த பின்
உண்ணுவோருமுண்டு !

அறிவியல் வளர்ச்சியோ
அறிவிலிப் புரட்சியோ
காக்கப்படுகிறது இப்போது
தேவையெனில் கக்கப் படும்
என்ற அறிவிக்கையோடு !

எதுவாகவும் மாறும்
செல்லொன்று உண்டதில்
மாறும் தேவையான
உணவுகள் உண்டபின்
தாயாகவோ சேயாகவோ !

புரிந்தது ஒன்றே...
குடித்தே வெடித்தாலும்
பணக்கார உறுப்புகளுக்கு
மறுஜென்மம் உண்டு !

அன்றி ஏனையோர்
புதைத்து இடத்தில்
மரம் வளர்க்கும்
ஹவாய் மக்களாவோம்
திசுக் கயிறு கொணர்வீர் !

- வினோதன்

எழுதியவர் : வினோதன் (2-Jul-17, 5:24 pm)
பார்வை : 72

மேலே