தந்தையின் நேசம்

தந்தையின் அணைப்பினிலே தளிர்நடையிடும் செல்வமே !
செந்தமிழில் மழலைமொழி செவிகுளிர பேசிடுவாய் !
உந்தன் அன்னைபோல் உனையணைத்துப் பேணிடுவார் !
இந்தநாளில் மட்டுமல்ல ! இனிவருநாள் எல்லாமே !!

பைந்தமிழில் கீதங்கள் பசுமையான நினைவலைகள் !
திக்கெல்லாம் எதனைத்தான் திடமாகத் தேடுகின்றாய் !
உன்விழியின் ஏக்கங்கள் உணர்வாரே தந்தையுமே !
கண்ணே நீ ! கவலைவிடு ! கண்முன்னே ! எதிர்காலம் !!

ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன் ( நி . மு . 323 )

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (4-Jul-17, 3:40 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 77

மேலே