துன்பங்கள்

தேடலே காரணமாகும் துன்பங்கள் அனைத்திற்கும்..
உடலே காரணமாகும் ஊழ்வினை அனைத்திற்கும்..
ஊடலே காரணமாகும் வெறுப்புகள் அனைத்திற்கும்..
பாடலே காரணமாகும் மூடத்தனங்கள் அனைத்திற்கும்..

விதைக்காதே, விதைக்காதே வெறுப்பைத் தான் விதைக்காதே.
அறுக்காதே, அறுக்காதே நம்பிக்கையை வேரறுக்காதே..
பாடாதே, பாடாதே சிற்றின்ப கானம் பாடாதே..
வேறுபடாதே, வேறுபடாதே
நல்ல கருத்தோடு வேறுபடாதே..
மறவாதே, மறவாதே இயற்கையையென்றும் மறவாதே...
சோகங்கள் யாவும் நாம் உண்டாக்கியவை தானே...

தவறே செய்யாமல் தண்டனை பெறும் போது உண்டாகிய வேதனை வாழ்வில் என்றும் தூங்கவிடுவதில்லை ஆறாத தழும்பாய்...

காதலே தவறென்றால் தாஜ்மஹாலை உலக அதிசயமென்ற புகழ்பாடிப் பெருமை கொள்வது தவறு தானே...
அதைக் கட்டிய ஷாஜகான் மும்தாஜ் முன்னாடி பல மனைவியரைக் கொண்டவரென்றால் அந்தத் தாஜ்மஹாலை எப்படி காதலின் அடையாளமாய் ஏற்பது?

விஷம் நிறைந்த சர்ப்பங்களுக்கு மத்தியிலே வாழ்வதென்றும் துன்பம் தான்...
எண்ணங்களின் ஆளுமை உங்களில் எத்தனை பேர்களிடம் உள்ளது?

மனதைக் கொன்று நீதியென்கிறீர்கள் உங்கள் வார்த்தை ஜாலம் கொண்டு...
ஏற்றுக் கொள்ள நானென்ன மூடனா?

உங்கள் மதிகெட்ட செய்கைகளே உங்கள் துன்பங்களாகட்டும்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (9-Jul-17, 7:00 pm)
Tanglish : thunbangal
பார்வை : 742

மேலே