டா

டா
===

எனக்கு பிடித்த தமிழின் வார்த்தை "டா"..
வார்த்தையா ? எழுத்தா ? தெரிய வில்லை ..
எனினும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று .

தாய் அழைத்த போது தாய்மையை 
தந்தை அழைத்த போது கண்டிப்பை 
அண்ணன் அழைத்த போது பாசத்தை 
நான் அண்ணனை அழைத்தபோது கொஞ்சலை 

சகோதரி அழைத்த போது என் இளையவனடா நீ என்ற எண்ணத்தை 
நண்பன் அழைத்தபோது எங்கள் நட்பின் ஆழத்தை 

தோழியை நான் அழைத்த போது பேதமில்லாத நட்பை 
தோழி என்னை அழைத்த போது நீ என் நெருங்கிய நண்பனடா 
என உணர்வுகளை வெளிப்படுத்தவும் "டா" 
என்ற வார்த்தைக்கு ஈடு இல்லை 
எனக்கு பிடித்த தமிழின் வார்த்தை "டா"..

எழுதியவர் : rajasekar (13-Jul-17, 7:33 pm)
சேர்த்தது : raja sekar
Tanglish : taa
பார்வை : 153

மேலே