பறையடித்தல்

.........பறையடித்தல்.........

எழுந்து நின்ற பல கலைகள்
இன்று அழிந்து போய்க்
கிடக்கின்றன...
அதில் இணைந்து கொள்ளக்
காத்திருக்குது பறைக்கலை..

அந்தக்காலம் தொட்டு
இந்தக் காலம் வரை
அடித்து அடித்தும் ஓயாத கலை
இன்று மேல்சாதி அடக்குமுறையில்
ஒடுங்கிப் போய்க் கிடக்கிறது..

மகிழ்வான இசையாக
மண் தோன்றி
இறப்பு வீடுகளில் மட்டும்
இசைக்கும் கலையாக வீழ்ந்தாலும்
உரமாக வளர்ந்து உயிரற்றவருக்கும்
உயிரூட்டி நின்றது இக்கலை..

தமிழரின் பாரம்பரிய அடையாளம்
வளர்த்து வந்த கலை
பல கருவிகளின் முன்னோடியாய்
திகழ்ந்த கலை
இன்று திக்குத் தெரியாத
காட்டில் தனிமரமாய் எழுந்து
நிற்கவே உரம் தேடி அலைகிறது...

முடியக் காத்திருக்கும்
இக் கலையை
பள்ளிகளில் பாடமாக்குவோம்
குயில்களுக்கு போட்டியாக்குவோம்
இழுபட்டுச் செல்வதை மீண்டும்
இசையோடு இணைத்தே
பழமைகளை அழிவுறாது
பேணியே பாதுகாத்திடுவோம்....

எழுதியவர் : அன்புடன் சகி (15-Jul-17, 5:23 pm)
பார்வை : 2214

மேலே