கண்ட நாள் முதலாய்-பகுதி-14

கண்ட நாள் முதலாய்-பகுதி-14

.........கண்ட நாள் முதலாய்.........

பகுதி : 14

"இப்போ எதுக்கு நீ இப்படி ஷாக் ஆகிறாய்??கல்யாணம்தானே பத்து நாளிலனு சொன்னேன்..என்னமோ ஹனிமூன் பத்து நாளில என்டு சொன்ன மாதிரில ரியாக்ட் பண்றாய்.."

"ஏய் என்னடி புரியாம பேசுறாய்...நான் எவ்வளவு குழம்பிப் போயிருக்கேன்னு உனக்கே தெரியும்தானே??கல்யாணத்துக்கு சம்மதம்னு என் வாய்தான் சொல்லியிருக்கே தவிர மனசு இல்லை...இதில பத்து நாளில கல்யாணம் என்டா எனக்கு தலையே சுத்துது.."

"உன் நிலைமை எனக்கு புரியாம இல்லை துளசி...ஆனால் என்னைக் கேட்டா இந்த கல்யாணம் எவ்வளவு சீக்கிரம் நடக்குதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது உனக்குத்தான்டி நல்லம்...உன் மனசில இருக்கிற குழப்பங்கள் மறைஞ்சு ஒரு தெளிவு வரும்...இடைவெளி உன் மனசை மாத்தினாலும் மாத்திடும் துளசி...அதனால பத்து நாளில கல்யாணம் என்கிறது நல்லதுதான்டி.."

"ஆனாலும் நான் இன்னும் ஒரு புது உறவை ஏத்துக்கிறதுக்கு தயாராகலை பவி...இன்னைக்கு அரவிந்தனோட போன்ல கதைக்கவே நான் பட்ட பாடு...இதில இவ்வளவு சீக்கிரம் இந்த கல்யாணம் நடந்தா எங்க என்னை அறியாமலே அவரை காயப்படுத்திடுவேனோன்னு பயம்மா இருக்குடி.."

"எங்க உன்னை அறியாமலேயே அவரை நீ காய்ப்படுத்திடுவியோன்னு நினைக்கிறதே உன் மனசு மாறிட்டு வாறதுக்கான முதல் அறிகுறிதான்டி....எதை நினைச்சும் கவலைப்படாதே...நடக்கிற எல்லாமே நல்லதாவே நடக்கும்.."

"நீ பக்கத்தில இருந்தாலாவது கொஞ்சம் பரவாயில்லை...நீ இல்லாம எப்படி எல்லாத்தையும் சமாளிக்கப்போறனோ தெரியல.."

"ஏன்டி அதுக்காக நான் என்ன உன் கூடவேயா இருக்க முடியும்...உன் வாழ்க்கை அது நீ தான் தனியா நின்னு சமாளிச்சாகனும்...உனக்கு எப்பவுமே நல்ல நண்பியா நான் இருப்பன்...ஆனால் என் துணை இல்லாமலும் நீ உன் வாழ்க்கையை வாழ்ந்தாகனும்டி..."

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே சுசியும் ஆதியும் உள்நுழைந்தார்கள்...சுசி அவர்கள் இருவருக்கும் டீயும் சில பலகாரங்களும் கொண்டு வந்திருந்தாள்...."அட அட அட நீ தான் சுசி எனக்கு என்ன தேவையோ அதை கரைக்ட் டைம்ல கரைக்டா கொண்டு வந்திடுறாய்..."

"ஹா...ஹா...ஏன்னா நாம எல்லாம் ஒரே இனமாச்சே அக்கா..."

அப்படிச் சொல்லு...என்றவாறே ஒவ்வொரு பலகாரங்களையும் சுவைக்க ஆரம்பித்தாள் பவி...

"பவி அக்கா என்னை பார்க்குக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னீங்களே??எப்போ போறோம்?.."

"அதை மறப்பனா அக்கா...நாளைக்கே போவோம்டா ஆதி...ஈவினிங் ஒரு நாலு மணி போல ரெடியா இரு....நாம எல்லாருமே போவோம்....சுசி என்ன மாதிரி நீயும் வாறாய் தானே..??.."

"எனக்கும் ஆசைதான் அக்கா,ஆனால் வகுப்புகள் இருக்கு...நீங்க மூனு பேரும் போயிட்டு வாங்க..."

"சரி விடு...நான் லண்டன் போய் வந்தப்புறம்....ஒரு சுத்து சுத்தலாம்.."ஓகே டன் அக்கா...

அப்போ நான் கிளம்புறன் மேடம்....நீ உன் டீரிம்ஸை கண்டினியூ பண்ணு என்று கூறி துளசியின் முறைப்பை பதிலுக்கு பெற்றுக் கொண்டவள்,சுசி ஆதியோடு சேர்ந்து அவளை இன்னும் நன்றாக வதைத்துவிட்டே சென்றாள்...

பவி சென்ற பின் இதுவரை நேரமும் எங்கோ சென்றிருந்த தனிமை அவளை மீண்டும் வந்து கட்டிக் கொண்டது...

அங்கே அரவிந்தனோ போனைக் கையில் வைத்து பார்த்தவாறே சிரித்துக் கொண்டிருந்தான்...எதற்காக அவளுக்கு அழைப்பை எடுத்திருந்தானோ அதை தவிர மத்த எல்லாத்தையும் அவளிடம் கேட்டிருந்தான்....அவனது ஒவ்வொரு கேள்விகளுக்குமான அவளது ம்ம் ஐ நினைத்துச் சிரித்தவன்...அவளது இலக்கத்துக்கு மீண்டும் அழைப்பை ஏற்படுத்தலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தான்...

எங்கே அவன் தன் இலக்கத்துக்கு அழைத்துவிடுவானோ என பயந்த துளசி போனை சுவிட்ச் ஆப் பண்ணிவிட்டு தூங்கிவிட்டாள்....அன்றைய நாள் அப்படியே ஓடி மறைய மறு நாள் மூவரும் பார்க் சென்று வந்தார்கள்...

இப்படியே மூன்று நாட்கள் போனது தெரியாமல் போக பவி கிளம்பும் நாளும் வந்தது...துளசியின் குடும்பம் முழுவதும் பவியை வழியனுப்ப பவியின் வீட்டிற்கு வந்திருந்தார்கள்....அவர்களுக்கும் அவள் துளசியின் திருமணத்தில் இருக்கமாட்டாள் என்பது கவலையாக இருந்தாலும் சிரிப்போடே அவளுக்கு விடைகொடுத்தார்கள்....

"என்னடி உன் கண்ணில கண்ணீர் வழியும்னு பார்த்தா இப்படி தீப்பொறி பறந்துகிட்டு இருக்கு.."

"ஓஓஓ....உனக்கு அந்த நினைப்பு வேற இருக்கா??நீ என் கல்யாணத்துக்கு கூட நிற்காம கிளம்புவ,நாங்க உனக்கு கண்ணீரோட டாட்டா காட்டனுமாக்கும்.."

"என்னடி மறுபடியும் ஆரம்பிக்கிற,நான் என்ன வேணும்னா கிளம்புறன்..என் நிலைமை அப்படியாப் போச்சு...இப்போ என்ன போயிட்டு அடிச்சுப் பிடிச்சாவது ஒரு மாதத்தில வந்து உனக்கு என்னோட ஆசிர்வாதங்களை வழங்கிட்டுத்தான் மறுவேலை...ஓகேயா??கொஞ்சமாச்சும் சிரிடி...இப்படி முகத்தை வச்சிருந்தா நான் எப்படி போறதாம்.."

"சரி..சரி பிழைச்சுப் போ...ஆனால் ஒரு கண்டிசன்..?"

"என்னடி..?"

"நீ எப்போ இனி திரும்பி வாறியோ அப்போ தான் என் கல்யாண போட்டோ எல்லாம் காட்டுவேன்...நீ அரவிந்தனையும் என்னையும் நேரில வந்து தான் பார்த்தாகனும்..."

"அடிப்பாவி...இது உனக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல...."ஆனாலும் பவிக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தது...துளசி நடக்கவிருக்கும் கல்யாணத்தை மனதார ஏற்றுக்கொண்டு விட்டாள் என்பது அவளது பேச்சினூடாகவே அவளுக்கு விளங்கியது...அதை எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் துளசியோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்...

"இவங்க ரெண்டு பேரும் ரோமியோ ஜீலியட்...நான் இவங்களை நேரில வந்து தான் பார்க்கனுமாம்...ரொம்பத்தான் போடி.."

"நான் போறது இருக்கட்டும்...முதல்ல நீ கிளம்புற வழியை பாரு.."

"நானும் போகத்தான்டி போறன்....பின்ன போகாம இங்கேயே இருந்திடுவேன்னு மட்டும் நினைக்காத.."

"அப்படியே நாங்க நினைச்சுட்டாலும்..."

அவர்கள் அப்படியே மாறி மாறி வாயடித்துக் கொண்டிருக்க பவியை அழைத்துச் செல்வதற்கான வாகனமும் வந்து சேர்ந்தது...அதுவரை நேரமும் சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்கள் கண்களில் நீர் வழிய விடைபெற்றுக் கொண்டார்கள்...இருபது வருட கால நட்பில் இருவருமே ஒருவரை ஒருவர் பிரிந்ததில்லை....அவள் இருக்கும் வரை அவளோடு வம்பு செய்து கொண்டிருந்தவள்,பவி கிளம்பியதும் அழுது தீர்த்துவிட்டாள்...அவளை சமாதானப்படுத்தி வீட்டிற்கு கூட்டி வருவதற்குள் அவளது குடும்பத்தினர்தான் படாத பாடு பட்டுவிட்டார்கள்...

வந்திறங்கியதுமே யோகேஷ்வரன் சொன்ன செய்தியில் துளசிக்கு தலையே வெடித்துவிடும் போல் இருந்தது...அவர் என்னமோ அவளது சோகத்தை கொஞ்சம் குறைக்கலாம் என்றே நாளை அரவிந்தனுடைய ஊர்க்கோயிலுக்கு செல்ல வேண்டுமென்று சொன்னார்...ஆனால் அது துளசிக்கோ பெரும் தலையிடியை கொண்டு வந்து சேர்த்தது...


தொடரும்....


Close (X)

13 (4.3)
  

மேலே