எங்க ஊரு போல வருமா

ஆத்து தண்ணீயும் தேனாய் இனிக்குது
ஆலமர விழுதும் ஊஞ்சலாய் ஆடுது
குயில்கள் பாட்டு பாடுது - வண்ண
மயில்கள் எல்லாம் ஆட்டம் போடுது

ஏரி குளம் நெறஞ்சு இருக்கு
வயல்கள் எல்லாம் விளஞ்சு இருக்கு
இயற்கை வளங்கள் நெறஞ்ச ஊரு
இன்பம் பொங்கும் எங்க ஊரு

வண்ணப் பூக்கள் பூத்து இருக்குது
மணம் வீசி எல்லோரையும் ஈர்க்குது
எங்கு பார்த்தாலும் பசுமை கவருது
எழிலோடு எங்க ஊரு சிறக்குது

பஞ்சம் இல்ல பட்டினி இல்ல
பாசம் மட்டும் நெறஞ்சு இருக்கு
போட்டி இல்ல பொறாமை இல்ல
பொங்கும் அன்பு நெஞ்சில் இருக்கு

தஞ்சம் என்று வந்தவரை
வாழ வைக்கும் ஊரு
வஞ்சம் இல்லா மக்கள்
வாழும் ஊரு எங்க ஊரு

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (16-Jul-17, 6:05 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 302

மேலே