தனிமைப் பயணம்

இதுவரை என்னவளை பார்க்கவில்லை; அவள்
எங்கு இருக்கிறாள் என்று தெரியவில்லை
எழில்மிகு மங்கையர் பலர் இருந்தாலும்
என் துணையைக் கண்டறிய முடியவில்லை

கவிதையில் மட்டும் காதலனாக மாறி
காதல் கனவுகள் காண்கிறேன் நான்
என் துணை எங்கேவெனத் தேடித்
தனிமைப் பயணம் தொடர்கிறேன் நான்

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்


Close (X)

8 (4)
  

மேலே