முத்தத்திற்கான காத்திருப்பு

சிலமணி நேரங்கள்
பல கதைகள் பேசிப்பேசியே
அலுப்பு தோன்றவில்லை !

உன்னை
ரசித்து ரசித்தே கொஞ்சம் கூட
சலிப்பும் தோன்றவில்லை !

இன்னும் மகிழ்வாய்த்தான் இருக்கிறது !

நல்ல வேளை !

வந்த உடனே சொல்லிவிட்டாய் !

போகும்போது கண்டிப்பாய்
ஒற்றைமுத்தம் தந்து விட்டுத்தான்
போவேன் என்று !

எழுதியவர் : முபா (17-Jul-17, 12:45 pm)
பார்வை : 680

மேலே