ஏற்றுக் கொள் அன்பே என் காதலை

ஏற்றுக் கொள் அன்பே என் காதலை

அவள் அருகே நான்
********************
அவள் அழகில் மயங்கியும் விலகித் தான்
சென்றேன் ஆனால் நாசிகள் அவள்
கூந்தல் வாசத்தை இதய அறையில்
வைத்துப் பூட்டிவிட்டது!

அங்கே கூந்தலோடுப் பூக்களும் சேர்ந்து
புது வாசம் வீசுகின்றது இளமைக் கூந்தல் போர்வையில் மறைந்துக் கொள்ள ஒரு வாசம் வீசும் இருள் போர்வை!

அவள் கூந்தல் விதவையாக வெள்ளைச் சீலையில் ஒழியும் நரைத்த முடியாக முதுமையில் வெள்ளைப் போர்வைப் பகலாக
அன்பு வாசம் வீச அன்று வரைத் தொடரும் என் அன்புக் காதல்!

என் அன்புக் காதலை ஏற்றுக் கொள்
விண் உலகுத் தேன் நிலவு~இல்லையென்றால்
மண்ணுலகில் மறைந்துக் கொள்கிறேன்
புழுக்களுக்கு என் காதல் தேக
உணவாக!
~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்


Close (X)

0 (0)
  

மேலே