என் பட்டுக்குட்டிக்கு

என் கங்காரு குட்டியே உன்னை இறக்கி வைக்க மாட்டேன் நான் இறக்கும் வரை ...
இறக்கும் பொழுதும் உன்னை சுமந்து கொண்டே இறப்பேன் ...
நான் இருந்தாலும் இறந்தாலும் உன்னோடே இருப்பேன் ...
மண்ணில் நான் புதைந்தாலும்(மக்கி மண்ணாகி போனாலும்) என் மனதில் என்றும் நீ வாழ்வாய் ...
உந்தன் ஒரு நொடி பிரிவிலும் துடித்திடுவேன் ...
உன்னை அள்ளி எடுத்து என் மார்பில் பூட்டிக்கொள்வேன் ...
எப்பொழுதும் உன்னை கருவறையில் சுமந்திடுவேன் ...
தாலாட்டு பாடி என் நெஞ்சறையில் உறங்க வைப்பேன் ...
என் இதயத்துடிப்பை அடக்கிடுவேன் உன் உறக்கம் கலையாதிருக்க...
முதல் முறை உன்னை பார்த்து உன் விரலுக்குள் என் விரல் பதித்து உன்னை தூக்கி முத்தமிட்டதை எந்த நாளிலும் மறக்க முடியாது ...
அழகான வலியை தந்து என்னை தாயாக்கிய என் உயிரே ...என் பனிக்குடம் உடைய உன் வருகைக்காக வலியெல்லாம் கடந்து
உன்னை பார்க்க ஆவலாய் காத்திருந்த நாள் ....என் பெண்மையின் தாய்மை பொருளை என் வாழ்வின் அர்த்தத்தை உணர்ந்த நாள் ....
என் வாழ்க்கையில் என்னால் மறக்கமுடியா என் தாய்மையின் நாள் ...உன் பிறந்த நாள் ...
முதல் முறை என் மார்பில் உன்னை வைக்கும் பொழுது தானாக பால் சொரிய நீ பால் குடித்த ஞாபகம் மறக்கவில்லை ...
என் அன்போடு என் உதிரத்தை பாலாக்கி உன் பசி போக்குவேன் ....
கொஞ்சம் நகம் வளர்ந்ததும் மார்பில் நகத்தால் கீறிய வலி ...சுகமான வலி ...
நீ பால் குடிக்கும் பொழுது நான் உன் நகம் கடித்து துப்புவேன் ...ஆனாலும் உனக்கு அவ்வளவு சீக்கிரமாக நகம் வளர்ந்துவிடும் ...
உன்னை காலில் போட்டு குளிப்பாட்டும் பொழுது ....ஒன்றுக்கு மூன்று முறை நீர் சரியாக விளாவியுள்ளதா எனப்பார்ப்பேன் ....
உன் கண்ணில் நுரை படும் பொழுது ...உன்னோடு நானும் அழுவேன் ....
நீ அம்மா என்று அழைக்கும் பொழுது ஆர்ப்பரிக்கும் ஆனந்தத்தோடு என் உலகம் பிறக்கிறது ...
உன்னை வாரி அணைத்து உச்சி முதல் பாதம் வரை மகிழ்ச்சியின் எல்லையில் ஆயிரம் ஆயிரம் முத்தமிட்டேன் ...
நீ தவழும் பொழுது உன்னோடு என் மனமும் தவழ்கிறது ...
நீ தத்தி தத்தி முதல் நடை என் மார்பு கூட்டில் நடக்கும் பொழுது மனதின் உணர்வை சொல்ல வார்த்தை இல்லை ...
நீ நடை பயிலும் பொழுது உன்னோடு சேர்ந்து நானும் நடை பயின்றேன்...
நீ தவறி விழும்பொழுது நான் பதறி போனேன் ...
ஓடி வந்து இடுப்பில் தூக்கி வைத்து வேடிக்கை காட்டுவேன் ...
ஆராரோ தாலாட்டு பாடி மடியினில் தூங்க வைப்பேன் ...
என் கூரை புடவையில் ஆனை கட்டி ஊஞ்சலில் கண்ணுறங்க வைப்பேன் ...
நீ ஓடி ஒளிந்து முகத்தை பார்த்து சிரிப்பாய் ... உன்னுடனே ஓடி ஒளிந்து உன்னை எட்டிஎட்டி பார்த்து புன்னைகை பூப்பேன் ...
ஆனால் உன்னை போல் அழகாய் யாராலும் சிரிக்க முடியாது ....
உன் கன்னக்குழி சிரிப்பில் என்னை மறந்தேன் ....என் வலிகளை மறந்தேன் ...
என் கண்ணே பட்டு விடும் என்றே சொல்லி கண் மையில் திருஷ்டி பொட்டு வைத்திடுவேன் ...
உனக்கு பல் முளைக்க ஆரம்பித்ததும் என் மார்பில் முதலில் கடித்தாய் ...
வலிக்கவில்லை ...மாறாக மகிழ்ச்சி பொங்கியது ....
சோறு ஊட்டிவிடும் பொழுது ...விரலை கடித்திடுவாய் ...
சிரித்துக்கொண்டே உந்தன் தலையை வருடிவிடுவேன் .....
வெளியே செல்லும் பொழுது
வெயில் மழை தூசு மாசு உன்னை அண்டாதிருக்க தோளோடு அணைத்துக்கொள்வேன்.....
வெளியில் சென்றாலும்
புட்டிபால் கொடுத்ததில்லை ...எப்பொழுதும் தாய் பால் ....எனக்கு என் மகனே முக்கியம் ...
எப்பொழுதும் நம் கலாச்சார புடவை ..(தனிமனித சுதந்திரத்தை பறிக்க எவராலும் முடியாது ...உணவு , உடை , மொழி ,சின்னங்கள் , கட்டிடங்கள் இப்படி ஒரு அடையாளங்களை இன்னொன்றை கொண்டு திணிப்பது தப்பு ...(மொழி , மத அரசியலில் அரசியல் - மொழி சிதைவு ,கலாச்சார சீரழிவு , நிற வேறுபாடு , பண்பாட்டை(வளங்களை) திருடுதல் , திணித்தல்...மேலும் நிறைய உண்டு . உணர்வுகளை லாபமாகவும் அரசியலாகவும் மாற்றுகின்றனர் ...இதெல்லாம் தெரிந்தும் மக்கள் அநாகரிகத்தை ஏற்கிறார்கள் ...மொழி வெறி , மத வெறி , கலாச்சார சீர்கேடு ,பண்பாடு அழிவு , நிற பாகுபாடு - இவை எல்லாம் வணிகமாகிறது ...அழகு என்பது சிவப்பு இல்லை ...சிவப்பும் , கருப்பும் நிறமே ...மனமே குணமே அழகு ... மஞ்சள் மகத்துவமானது ...அதை திருடி விட்டு , செயற்கையை விற்று ...நோயையை கொடுத்து , மருந்தை விற்று வியாபாரம் நடக்கிறது ....ஒவ்வொன்றிலும் ஒரு அரசியல் , லாபம் , பணம் என்று நிறைய உள்ளது ...சிந்தியுங்கள் ...கேள்வி கேளுங்கள் ...கேள்வி கேட்கும் தலைமுறையே சிறந்த தலைமுறை ...ஏன் இப்படி இருக்கிறது தமிழ்நாடு என்று யோசியுங்கள் ? ஏன் வறட்சி என்று யோசியுங்கள் ? ஏன் உலக அழகி பட்டம் ? அது ஏன் இந்த நாட்டிற்கு கிடைக்கிறது ...( அதில் எல்லாம் கார்ப்பரேட் இருக்கிறது - அதன் பின் மேலை நாட்டு பொருளை விற்க அதற்கேற்றாற் போல் உடை , உணவு என்று ஆட்டுவிக்கிறான் .)வரி எங்கே என்று சிந்தியுங்கள் ? ஏன் மத வெறி ? ஏன் ரத்தம் ?( ஹிந்துவே கோழி , ஆடு அசைவம் சரி ...இலை காய் கனி எப்படி சைவம் ...அவைக்கும் உயிர் உள்ளதல்லவா ? ஏன் விலங்கை வெட்டினால் தான் உயிரோ ? மரம் என்ன கட்டையா ! ...இங்கே சைவம் என்று ஏதும் இல்லை ...எல்லாம் அசைவமே)(மாட்டை சாப்பிட்டான்
(எல்லா உயிரும் உயிர் தானே ,...இன்னொருவன் உணவை , மொழியை , முடிவு செய்ய நீ யார் மண்ணை அபகரிக்க , கலாச்சாரத்தை அழிக்க நீ யார் ? நான் தமிழன் இந்தியன் , இந்துவா வெறியனா இல்லை என்றால் உனக்கென்ன ? எந்த மதம் சொன்னது ஒரு பெண்ணை வன்மத்தோடு பார் , அவளின் பெண்மையை குலை , தாய்மையில் இரும்பை குத்திவிடு என்று .... ஹிந்தி ஏன்டா படிக்கலன்னு கேட்டா ...வாய் வெத்தல பாக்கு போட்டுக்கும் ....( தமிழ் ஏன்டா படிக்கலன்னு கேட்டனா ....ஏன்னா அவன் அவனுக்கு அவன் அவன் மொழி தான் முக்கியம் . நான் உன்கிட்ட பேச ஆங்கிலம் போதும் ....என் மண்ணுல நீ வியாபாரம், அரசியல் பண்ண வேல பாக்க நான் ஏன்டா உன் மொழியை கத்துக்கணும் , உன் வேலையை பார்த்துட்டு போ ...இல்லை என்றால் செவில் திரும்பிடும் ....உனக்கும் எனக்கும் வாய்க்கால் வரப்பு சண்டையா அப்புறம் ஏன்டா ? வெளி ஆட்களுக்கு சொல்ல வரலாறுனா என் வரலாறு ... தேர்வுனா உன் இத்து போன வரலாறு .... நான் ஏன் படிக்கணும் உன் வரலாறை ( இது கூட ஒரு அரசியல் ...இதற்காகவே நிறைய ஊடகமும் , பதர்களும் இருக்கிறார்கள் ) ... என் வரலாறே எனக்கு தெரியல (என் தோழியை கொல்வதற்கு முன் என்னை கொன்றுவிடு ...இந்தியனே, இந்துவே .....)
என்பதற்காக மனிதனை துன்புறுத்துவதில் எங்கே இருக்கிறது மனித நேயம் ..., வடநாட்டவரே ஏன் அறியாமையில் இருக்கிறீர் ...அரசியல்வாதி உங்களை ஆயுதமாக பயன்படுத்துகிறான் ...ஒருவரின் உணவை நாம் முடிவு செய்வது அபத்தம் ...வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இப்படி செய்கிறார்கள் ...தமிழ்நாட்டில் தான் சிறந்த கால்நடை மருத்துவமனை உண்டு அதை விட ஆவினங்களை குடும்ப அங்கத்தவர்களாக பாவிக்கிறோம் , எங்களின் வீரம் சல்லிக்கட்டிற்காக போராட காரணம் உண்மையில் என்னவாக இருக்கும் ...அரசியல் .அரசியல் லாபம் ....) இந்தியனே உன் எண்ணம் எக்காலத்திலும் ஈடேறாது ...வடநாட்டில் தான் உன் சொல் எடுபடும் இங்கே தென்னாட்டில் உன் எண்ணம் பலிக்காது ...தமிழ்நாட்டில் நிச்சயம் முடியாது ....உம் குப்பைகளை நீயே வைத்துக்கொள் ....எம் அடையாளங்களை அழிக்க நான் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன் ...உம் இடத்தில் வாழ முடியவில்லையா ? ஏன் எம் மண்ணை அபகரித்து அதை ஆள பகல் கனவு காணுகிறாய் ...) எல்லோரும் ஒன்று தான் ...இங்கே நிறைய கலப்படம் ...கலாச்சாரத்தை /வரலாறை மறைக்காமல் அடையாளமாக்குவோம் ...மண்ணிலே விதைப்பது நல்லதாகட்டும் ... தாய் மண்ணையும், தாய் மொழியையும் , கலாச்சாரத்தையும் , பண்பாட்டையும் , அடையாளங்களையும்( மரம் , செடி , மருத்துவம் , நூல்கள் , கட்டிடம் ,உடை கலாச்சாரம் , செயல்கள் (எது சரி - நிறத்தில் என்ன வித்தியாசம் , அந்நிய கலாச்சார உடை , உணவு நமக்கு எப்படி ஆரோக்கியம் ? இது போல் யோசித்து செயலாற்றுங்கள் ) தாயாக காப்போம் ...)...
மகனே ஒரு பெண்ணின் வலியை சொல்லிட முடியாது ...
அவளை வெறும் உடலாக போகப்பொருளாக பார்ப்பது ....
உன் தாயை நீ கொன்றதற்கு சமம் ...
ஆணும் பெண்ணும் சமம் தான் இயற்கையின் படைப்பில் ...
இதில் ஆண் ஆண்மையோடு பெண் பெண்மையோடு இருத்தல் வேண்டும் .....
என் செல்லமே
பார்த்து யூகிக்க முடியா மிருகம் ...மனிதன் ...
உடலில் இல்லை கற்பு உள்ளத்தில் உள்ளது கற்பு ...
உடலில் இல்லை வன்மம் உள்ளத்தில் உள்ளது வன்மம் ...
மகனே ஒரு பெண்ணை ...
ஒரு தாயாக ...
ஒரு தோழியாக ....
ஒரு தங்கையாக ....சகோதரியாக ...
ஒரு மகளாக ....
ஒரு பாட்டியாக ....
பார்க்க வேண்டும் ....
உன் மனைவியை மட்டுமே ....
உன் மனைவியாக ....உன்னில் பாதியாக ....உன் தோழியாக ....உன் மகளாக .... உன் காதலியாக ....உன் தாயாக ....பார்த்துக்கொள்ள வேண்டும் ....உன்னை நம்பி வந்தவளை எப்பொழுதும் நீ சந்தோசமாக பார்த்துக்கொள்ள வேண்டும் .....

உனக்கு நான் மகிழ்ச்சியை தரவில்லை என்றாலும் பரவாயில்லை
துன்பத்தை தரவே மாட்டேன் ....
உன் நிம்மதியை குலைக்க மாட்டேன் ....
என்னிடம் இருப்பவற்றை கொண்டு அதில் உன்னை சந்தோசப்படுத்துவேன் ...
என் வலிகளையும் சந்தோஷங்களையும் உன்னிடமே சொல்வேன் .... உன் மடியில் தான் தூங்குவேன் ...
உன் பாதையின் விளக்காவேன் ...
உனக்கு எப்படி வாழ ஆசையோ அப்படியே வாழ் ...
விழும் பொழுதும் எழும் பொழுதும் உன்னோடு நிற்பேன் ...
நீ சிறந்த மனிதனாக இருக்க வேண்டும் அது மட்டுமே எனக்கு போதும் ...
எனக்கு நீ ஊட்டி விடும் பொழுது ...
என் தாய் , தோழன் எல்லாம் என் மகனே ...
உனக்காக நானும் ...
எனக்காக நீயும் தேடும் தேடலே ...
உண்மையான பாசம் மகனே ...

எம்மை கட்டிக்கொண்டு தூங்குவாய் அன்பாய் ...
தாயிற்காக யாரையும் எதிர்த்து நிற்பாய் ...
எம் சேலை முந்தானையை பிடித்து கொண்டு நடப்பாய் ...
சேலையை போர்த்திக்கொண்டு உறங்குவாய் ...
உம் செயல் அனைத்தையும் பார்த்து ரசித்திடுவேன் தந்தையோடு ...
உன் வெற்றியை கொண்டாடிடுவேன் ... தோளை தட்டிக்கொடுப்பேன் ...
உன் மகிழ்ச்சியில் ஆகாயத்தில் மிதப்பேன் ...
உன் தோல்வியில் தோள் கொடுப்பேன் ...
எப்பொழுதும் உன்னோடு இருப்பேன் .....
எப்பொழுதும் உன்னை பார்த்துக்கொள்வேன் ...
முதுமையில் மன நிம்மதியோடு உன்னை பார்த்து சிரித்துக்கொண்டே உன் மடியில் இறப்பேன் ...

எங்கே இருந்தாலும் உன் அருகில் காற்றாக இருப்பேன் மகனே ...உன் அம்மா பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (19-Jul-17, 12:53 pm)
பார்வை : 7063

மேலே