அறியாமை விலக்கிடு என் நெஞ்சே

வார்த்தைகளால் ஞானத்தை வழங்க இயலாது பிறருக்கு.
அவரவர் அறிவின் உணர்திறன் வார்த்தைகளின் தூண்டுதலால் ஞானத்தைப் பற்றிக் கொள்கிறது தம்மால் முடிந்த அளவு...

பிறருடைய ஆடம்பர வாழ்க்கை கண்டு தானும் அவர்போல் வாழ வேண்டுமென்ற ஆசையால் மனம் உந்தப்பட்டு, ஆடம்பர மனிதரிடம் ஆகிறது சமர்ப்பணம்...
அந்தச் சமர்ப்பணத்தில் இருந்து தோன்றுகிறது அறியாமை...
அந்த அறியாமையே முதலீடாகி வாழ்வில் அனுபவமாகிறது துன்பங்கள்...

ஆடம்பரத்தைப் பெற இயலாத நிலை ஏற்பட்டாலோ, இருக்கும் ஆடம்பரம் பறிபோகும் நிலை ஏற்பட்டாலோ ஆடம்பரத்தைப் பெறவும், தக்க வைத்துக் கொள்ளவும் போராடுகிறார்கள் இந்த மானிடர்கள்...

ஏழையாக இருந்த போதிருந்த ஞானம் பணம் குவிந்தால் இருக்குமா?

சிறுவனாக இருக்கிறேன் பணமே இவ்வுலகில் தகுதி என்றால்...
முதியவனாக இருக்கிறேன் ஞானமே இவ்வுலகில் தகுதி என்றால்...
என்னை பழுத்த பழமென்றும் செல்லுவார்கள் எனதன்பு நண்பர்கள்...

நேற்று சுத்தம் செய்த பாத்திரம் தானேயென்று இன்று கழுவாமல் உணவு உண்ண பயன்படுத்தலாமா?

மனமும் பாத்திரத்தைப் போன்றதே...
அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியதும் அவசியமே...
அறிவாயோ என் நெஞ்சே???

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (19-Jul-17, 6:57 pm)
பார்வை : 166
மேலே