கடைசிப் புன்னகை

கடைசிப் புன்னகை

பாரதிதாசன் போட்டியாளர்

புன்னகையும் புரிகின்றாள்
------- பூவையொத்த மாதுமிவள்
கன்னலென சுவைத்திடுமே
------- கடைசியாக சிரித்திடவே
உன்றனையே நினைத்திட்டேன்
------- உருகுதடி என்னிதயம்
என்றனையே கொல்லுகின்றாய்
------- ஏனடியும் புன்னகையோ !!!

மாதுமிவள் மயங்கிடுவாள்
------ மாமன்நான் வந்திடவே !
சாதுவாகி என்மடியில்
------ சாய்வாலே சொர்க்கம்தான் !
ஏதுநீயும் தாமதமும்
------ ஏங்கிநிற்க வைக்கின்றாய் !
தூதுசென்ற இதயத்தைத்
------ தேடுகிறாள் எழிலாக !!!


பூவோடு பூத்திருக்கும்
------ பூவையிவள் என்செய்வாள் !
பாவாடை தாவணியில்
------ பார்த்திட்டேன் ஓர்நாளில் .
பூவாடை நறுமணத்தால்
------ பூமகளும் காதலினால்
பாவோடு இசைதனிலே
------ பாதகத்தி இணைந்திடுவாள் !


தயங்காதே என்னவளே
------- தரைபார்த்து நடைபழகு !
முயல்போன்றே தாவியுமே
------- முழுதாகப் பிடித்துக்கொள் !
கயல்விழியாள் எனைநோக்கக்
------- காதலினால் மெய்மறந்தேன் !
வயல்வெளியில் வேலைசெய்தே
-------- வகையுறவே நேசிப்பேன் !!!!


கண்ணாடி முன்னாலே
------ கண்மயங்கி நிற்கின்றாய்
பெண்ணேநீ பித்தகாகிப்
------- பேர்சொல்ல வைக்கின்றாய்
வண்ணமகள் புன்னகையில்
------- வாசமுந்தான் வீசுதடி .
எண்ணமெல்லாம் உன்நினைவு
------- எத்திக்கும் உன்பிம்பம் !!!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் . பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (20-Jul-17, 10:12 pm)
பார்வை : 112

மேலே