மோதிர விரல் பாப்பா

வாடா முத்து. நல்லா இருக்கறயா?
■◆◆◆◆◆◆
நாங்கெல்லாம் நலம் அந்த

மாரியம்மன் புண்ணியத்திலே. சரிடா

மாரிமுத்து நீ பெத்த மோதிரவிரல்

எங்கடா, காணோம்?
■◆◆◆◆
ஏண்டா முத்து, எல்லா

மனுசங்களுக்குந்தான் மோதிரவிரல்

இருக்குது. ஒரு பெண் மோதிரவிரலை

மட்டும் பெத்துக்க முடியுமா? ஏண்டா

புராணக் கதைகள்லகூட இந்த மாதிரி

நடந்திருக்க வாய்ப்பில்லை. நீ

என்னடா பைத்தியகாரத்தனமா 'நீ

பெத்த மோதிரவிரல் எங்கே' -ன்னு

கேக்கற!
😊😊😊😊😊😊
நான் சொன்னதெல்லாம் சத்தியம்.

சத்தியத்தைத் தவிர வேறோன்றும்

இல்லை.
😊😊😊😊😊
என்னடா நீதிமன்றத்தில சாட்சி

சொல்லப்போற மாதிரி

சத்தியமெல்லாம் செய்யற?

😊😊😊😊😊

நாஞ் சொல்லப்போறதும் ஒரு

உண்மைதாண்டா.
😊😊😊😊😊

என்னடா மண்ணாங்கட்டி உண்மை?

😊😊😊😊

சரி உங்க பாப்பா பேரு என்ன?

😊😊😊😊😊

ஏண்டா பாப்பா பேர நகரசபையில

பதிவு பண்ணறபோது நீயுந்தாண்டா

எங்கூட இருந்த. மறந்து போச்சா.

😊😊😊

சரி நீ இப்ப பாப்பா பேரச் சொல்லு

நான் ஒரு உண்மையச் சொல்லறேன்.

😊😊😊😊

பாப்பா பேரு அனாமிகா. நாங்க

'அனாமி, அனாமி'ன்னு செல்லமாக்

கூப்புடுவோம்.

😊😊😊😊😊

சரி. அனாமிகா -ன்னா அர்த்தம்னு

உனக்கும் உன் மனைவி தாமரைக்கும்

தெரியுமா?
😊😊😊😊

தமிழர்கள் அவுங்க பிள்ளைங்ஙளுக்கு

தமிழ்ப்பேருங்கள வைக்கிறதில்ல.

இதுதான் இன்றைய தமிழர் நாகரிம்.

பெரும்பாலான தமிழர்கள் அர்த்தம்

தெரியாத, சரியா உச்சரிகத்

தெரியாத/முடியாத இந்தி அல்லது

சமஸ்கிருப் பேருங்களத்தான்

பிள்ளைங்களுக்கு வைக்கறாங்க.

நானும் திரைப் படத்தில வந்த ஒரு

கதாப்பாத்திரத்தின் பேரத்தான் எஞ்

செல்லப் பாப்பாவுக்கு வச்சுட்டேன்.

இப்பச் சொல்லுடா முத்து அந்த

உண்மையை.

😊😊😊😊😊

'அனாமிகா' -ன்னா 'மோதிரவிரல்' -

ன்னு அர்த்தம்.

😊😊😊😊😊

அடக் கடவுளே. எம் பொண்ணு

பேருக்கு மோதிரவிரல் -னு அர்த்தமா?

அய்யோ, அவ வளந்து

பள்ளிக்கூடத்தில சேத்ததுக்கப்பறம்

யாருக்காவது அவ பேருக்கான

அர்த்தம் தெரிஞ்சா "அடியே

மோதிரவிரல், இங்க வாடி"-ன்னு

கூப்பிட்ட எங்க பாப்பா துடித்துப்

போயிடுவாலே. ஏண்டா எங்க

பாப்பாவுக்கு நல்ல தமிழ்ப் பேரா

மாத்தி வைக்கணும். அதுக்கு என்னடா

செய்யணும்?
😊😊😊😊
இன்னைக்கே போயி ஒரு

வழக்குரைஞரப் பாரு. அவருகிட்ட

வெவரத்தைச் சொல்லி உனக்கும்

உன் மனைவிக்கும் பிடிச்ச பேரச்

சொல்லு. அவர் உங்க பாப்பா பேர

மாத்தறதுக்கு வேண்டிய ஏற்பாட்டைச்

செய்வாரு.
😊😊😊
ரொம்ப நன்றிடா முத்து.
■■■■■■■■■■■■■◆◆■■■■■■■■■■■■■■■
சிரிக்க அல்ல. சிந்திக்க.
◆◆◆◆◆◆◆◆◆◆◆●●●●●●●●●●●●●●●■■◆◆◆◆
Anamika = Ring finger
indiachildnamescom

எழுதியவர் : மலர் (22-Jul-17, 3:53 pm)
பார்வை : 274

மேலே