படைப்பின் பிழைகள்

இறைவன் படைப்பின்
பிழைகளின்
சாட்சிகள் இவர்கள்
தினம் தினம் போராட்டம்
கண்களில் நீரோட்டம்
நிரந்தரமாக
வீடும் இல்லை
வீதியும் இல்லை
வானமே கூரை
நிலவே விளக்கு
தாதிகள் இல்லை
தாழிகள் இல்லை
பிறப்பும் இறப்பும்
திறந்தவெளியில்
சிக்கலில்லா நிகழ்வுகளாக...

எழுதியவர் : செல்வமுத்து.M (26-Jul-17, 9:11 am)
Tanglish : Padaippin pilaikal
பார்வை : 199

மேலே