ஏன்

ஏன் ?
கவிதை by :கவிஞர் பூ.சுப்ரமணியன்
சுற்றி வரும்
சுடும் சூரியனை
வணங்கும் நீ
இரவைப் பகலாக்கும்
முழு நிலவை
ரசிக்கும் நீ
புல் நுனியில் நிற்கும்
பனித்துளியை
ரசிக்கும் நீ
வானில் தோன்றும்
வானவில்லை
ரசிக்கும் நீ
அசையும் தேரையும்
ஆடும் மயிலையும்
கூவும் குயிலையும்
பறக்கும் பறவையும்
ரசிக்கும் நீ
உன்னை நம்பி வாழும்
உழைக்கும் ஏழையை
கண்களால் ரசித்து
கரங்களால் அணைத்து
மனிதநேயம்
காட்ட மறுப்பது ஏன் ?
பூ.சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை,சென்னை