அப்துல் கலாம்

அப்துல் கலாம்
காற்றைக் கிழித்த
காவிய நாயகன்.

காதல் கனவில்
மூழ்கித் திளைத்த
இளைஞர் உலகை
இலட்சியக் கனவில்
முத்தெடுக்க வைத்தவர்.

சாதிக்கலாம்
போதிக்கலாம்
இரண்டையும்
ஒருங்கே செய்த
உத்தமர் கலாம்.

வாழ்வின் எல்லைவரை
சிறகு விரித்த
அக்னி பறவை.

காலம் சென்ற கலாம்
காலத்தை வென்ற கலாம்
உமக்கு எங்கள் ஸலாம்.


கேப்டன் யாசீன்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (27-Jul-17, 7:07 pm)
Tanglish : apthul kalaam
பார்வை : 110

மேலே