நீயில்லா வாழ்க்கை

நீயில்லா வாழ்க்கை

நீயில்லா வாழ்க்கை
நிலவில்லா பூமிதானடி...
தீயில்லா தீபம்
எப்படி ஒளி தரும்..?

பூத்துக்குளுங்கும் தோட்டத்திலே
புயல் வந்தால் தகுமா..?
என் பிஞ்சு இதயங்களால்
உன் பிரிவை தாங்க முடியலடி...

உயிரில்லா பிணம் போல
உணர்வின்றி இருக்கின்றேன்
தாயில்லா பிள்ளை போல
தனிமையிலே அழுகின்றேன்

துக்கம் நண்பனானது
தூக்கம் எதிரியானது
உன் பக்கமில்லா வாழ்க்கையினால்
என் பகலும் கூட இரவானது..!

காதல் பேசிய கண்கள்
கண்ணீரால் குளிக்குதடி
சாதல் மட்டும் தீர்வென்றே
சமயங்களில் தோனுதடி...

சாதல் மட்டும் தீர்வென்றே
சமயங்களில் தோனுதடி....


Close (X)

28 (4.7)
  

மேலே