அம்மா பாறையா

ராக்கி, ராக்கி
◆◆◆◆
யாரை அத்தை 'ராக்கி, ராக்கி'ன்னு கூப்படறீங்க?
◆◆◆◆◆
வாடி கண்மணி. நா யாரக் கூப்படப்போறேன். எங் கடசி மருமகளத்தான் கூப்படறேன்.
◆◆◆◆◆
கடசி மருமகளா? மாமனுக்கு எப்ப திருமணம் நடந்துச்சு. நான் உங்க தம்பி மகள். எங்களுக்கே தெரியாம மாமன் திருமணம் பண்ணீட்டாரா?
◆◆◆◆◆◆
அந்தக் கூத்த நா எப்பிடீடி சொல்லுவேன். வடக்க வேலைக்குப் போனானா அங்க ஒரு இந்திக்காரப் பொண்ணு எங் கடசி மவன் கண்ணப்பன் அழகில மயங்கி இவன மடக்கிட்டாளாம். இவன் அவளோட தாய் தகப்பன் சம்மதத்தோட இந்த ராக்கியை பதிவுத் திருமணம் பண்ணீட்டானாம். ரண்டு பேரும் ரண்டு நாளைக்கு முன்னாடி நம்ம வீட்டுக்கு வந்து எங் கால்ல விழுந்து மன்னிச்சு வாழ்த்தச் சொல்லி அழுதாங்க. உம்...சரி என்ன செய்யறது. பதிவுத் திருமணம் பண்ணினது ரண்டு வருசத்துக்கு முன்னாடி. இப்ப ஒரு ஆண் கொழந்தையோட வந்திருக்காங்க. சனங்கெல்லாம் இந்தத் திருட்டுக் கல்யாணத்தை கேவலமாப் பேசுவாங்கடி கண்மணி.
◆◆◆◆◆◆
அத்தை இந்தக் காலத்தில இந்த மாதிரி திருட்டுக் கல்யாணம் எல்லாம் அடிக்கடி ஒவ்வொரு நகரத்திலயும் நடந்திட்டுதான் இருக்குது. இப்ப என்ன, ஊர்வாய மூட ஒரு வரவேற்பை வச்சுட்டாப் போச்சு. சரி, மருமகள் அழகா இருக்கறாளா?
◆◆●●●●
அவளுக்கென்ன தங்கச் சிலை மாதிரி இருக்கறா? அவ பேருதான் எனக்குப் பிடிக்கல. அவ பேருக்கு என்னடி அர்த்தம்?
◆◆◆◆◆◆
ஆங்கிலத்தில 'ராக்' -ன்னா பாறை.
◆◆●●◆◆■
அய்யோ என்னோட அழகான மருமவ பேரு பாறையா?
◆◆◆◆◆●
அத்தை, ஆங்கிலத்திலதான் 'ராக்' -ன்னா பாறை. இந்தில 'ராக்கி'-ன்னா என்ன அர்த்தம்னு மாமங்கிட்டயே கேளுங்க.
■■◆◆◆◆
இவ பேரு பாறை. எம் பேரனுக்கு 'கல்'லுன்னு பேரு வச்சிருப்பாங்களோ?
◆◆●◆●●●
ஏன் அத நீங்க கேக்கலயா?
◆◆◆◆●◆●◆
அடி போடி நானே அதிர்ச்சிலிருந்து இன்னைக்குத்தான் மீண்டிருக்கறன். எம் பேரன் என்னப் பாத்தா மெரண்டிட்டு அழறான். அவுங்க ரண்டு பேரும் என்னமோ பேரு சொல்லிக் கூப்படறாங்க. இரு இன்னைக்கு சாயங்காலம் அவம் பேரக் கேட்டுப் போடறேன்.
◆◆●●●●
சரிங்க அத்தை. நானும் அம்மா அப்பாவும் நாளைக்கு வர்றோம்.
◆◆◆◆◆
சரி. போயிட்டு வாடி கண்மணி.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழியுணர்வை வளர்க்க. பிறமொழிப் பெயர்களின் பொருள் அறிய.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
◆◆◆●●●●●●●●●●●●◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Raaki = respectful
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

எழுதியவர் : மலர் (30-Jul-17, 6:28 pm)
பார்வை : 180

மேலே