மலர்களின் கீதம்

(பெயராய்வுத் தொடர்ச்சி)
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
நீயும் சசி நானும் சசி
நெனச்சுப் பாத்தா
எல்லாம் சசி!
◆◆◆◆◆◆
இரவில் மலரும் நமக்கெல்லாம்
அழகைத் தரும் அந்த சசி
வானத்திலே நீந்துகின்ற
அழகைப் பாரடா!
◆◆◆◆◆◆◆
சசி ஒளியில் ஒளிர்கின்ற
நமக்கெல்லாம் கிடைத்த பெயர்
மலர்கள்தானடா!
◆◆◆◆◆◆◆
சசின்னா சசிதான்
இரவு நேரத் தாரகை
வானில் நீந்தும் மேனகை
ஊர்வசியாய் நம்மையெல்லாம்
கவர்ந்திழுக்கும் நாயகிடா,
நீலவானம் வைத்துக்கொண்ட
பொட்டு அவள்தானடா!
◆◆◆◆◆◆◆
பாத்துப் பாத்து அவள் அழகை
ரசிக்கக் கற்றுக் கொள்ளடா
பகலில் அவள் அழகினை
பாத்து நீயும் பருகிட
உனக்கு விழிகள் ஏதடா!
◆◆◆◆◆◆
வானின் சசி இல்லன்னா
நமக்கு ஏது அழகுடா
கரிய வண்ணம் கொண்டு நாம்
இருளில் மூழ்கிப் போவோம்டா!
◆◆◆◆◆◆◆
சசின்னா சசிதான்
நிஷா நேரப் பூக்களுக்கு
சசிதான் ரவிடா!
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Sasi = moon
Ravi = sun
Nisha = night
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிறமொழிப் பெயர்களின் பொருள் அறிய.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

எழுதியவர் : மலர் (30-Jul-17, 7:43 pm)
Tanglish : malarkalin keetham
பார்வை : 186

மேலே