இதயக்கூட்டிற்குள் அங்கும் இங்குமாய்

மிக நெருக்கமாய் அணைத்து
இதழ் பதித்து "இச் "எனும்
சப்தம் செவிகளை குளிர்விக்க !
நெற்றியில் தந்த ஒற்றை முத்தம் !

இதயக்கூட்டிற்குள் அங்கும் இங்குமாய்
உலவிக்கொண்டே இருக்கிறது !

அவ்வப்போது விழி வழியே வந்து
எட்டிப்பார்த்து !

உன்னை பார்த்து விட்டு !
மீண்டும் உள்ளுக்குள்ளேயே
ஒளிந்து "கொல்" கிறது

எழுதியவர் : முபா (31-Jul-17, 1:26 pm)
பார்வை : 522

மேலே