என் மூச்சே நீ தானடா என் செல்வமே

என் மூச்சே
--------------

மூச்சற்று கிடந்த
உன் உடலை ...
என் மூச்சை தந்து
எழுப்பிக்கொண்டிருக்க ...
எழாமல் இருக்கும் எந்தன் நெஞ்சே ...
நெஞ்சை அழுத்திக்கொண்டிருக்கிறேன் ...
என் நெஞ்சின் வலியை அடக்கிக்கொண்டு ...
நெஞ்சே எழு ...
எழுந்துவிடு மகனே ...
என் சுவாசம் முழுக்க உன்னில் பரவட்டும் ...
எழு மகனே ...
எழுந்துவிடு என் மகனே ...
கைகள் இதயத்தை குத்திக்கொண்டிருக்க
மனம் வருடிக்கொண்டிருக்கிறது ...
விட்டு விலகாமல் தன் சுவாசத்தை மகனுக்கு தந்துவிட்டாள்...
அவன் எழும் பொழுது அதை பார்க்க அவளுக்கு கொடுத்து வைக்கவில்லை ...
ஆனாலும் அவளுடைய மகனுக்காக அவள் உயிரையே தந்துவிட்டாள் ...
இதை விட அவளுக்கு பெறுமதியான வரம் என்ன இருக்கும் ...
என்றும் அவள் அவனுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பாள் ...

என் மகனே
உனக்காக உன் அம்மாவின் குட்டி சமர்ப்பணம்
~ உன் அம்மா பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (31-Jul-17, 3:58 pm)
பார்வை : 193

மேலே