நீ நான் நீர்

[] நீ ... நான் ... நீர் ...
----------------------------------------------------------------------------

வாழை இலைமேல் தெளிக்கும் நீரா ..?
இல்லை நீ உன் -
வாய் திறந்து குடிக்கும் நீரா ..?
சொல் உனக்கு நான் யார் ..

விரல் நனைத்து இலை துடைத்து
துடைத்த நொடியில் உதரி
கழித்து விடப்படும் நீர் போல
நினைத்து விடுவாயா என்னை ..!

கையால் எடுத்து நாவால் சுவைத்து
சுவைத்த நொடியில் ஊனோடு
இணைத்து கொள்ளும் நீர் போல
அனைத்து கொள்வாயா என்னை ..!

அனைத்து கொள்வாய் என்ற
ஆனந்த சிந்தனையில் நானிருக்க -
இலைமேல் தெளிக்கும் நீருக்கும்
இவன் தகுதியற்றவன் என
நீ நினைப்பாய் ஆயின்
உன் வீட்டு வாசல் தெளிக்கும்
நீராகவேனும் என்னை ஏற்றுக்கொள் ..!

என்னை மிதித்தவாறே
நீ கோளமிடும் அழகை
நான் இரசித்தவாரே
புதைந்து கொள்வேன்
உன் காலடி மண்ணுக்குள்..!

- யாழ் ..

எழுதியவர் : யாழ் கண்ணன் (31-Jul-17, 5:57 pm)
சேர்த்தது : யாழ் கண்ணன்
பார்வை : 188

மேலே