என்னை நினைவிருக்கா

என்னை நினைவிருக்கா

கல்லூரி காதலில்
கல்லெறிந்து போனவளே...
அந்த காலங்கள் நினைவிருக்கா-நீ
தந்த காயங்கள் நினைவிருக்கா..!

நீதானே உயிரென்று
நித்தம் நித்தம் சொன்னவளே...
இந்த காதலன் நினைவிருக்கா-நான்
வந்த கனவுகள் நினைவிருக்கா..!

மாசற்ற என் மனதில்
மலையளவு உன் நினைவு
சுகமாக வந்த காதல்
சுமையாக வலிக்குதடி..!

இறக்கும் வலி நீ தந்தாய்
மறக்கும் மருந்து யார் தருவா..?
வாழும் வழி தெரியாமலே
வாழுகின்றேன் எப்படியோ..!

தேர்ந்தெடுத்தேன் நான் உன்னை
தேனிருக்கும் மலராக...
பூச்சி உன்னும் பூவென்று
புரியலையே அப்போது..!

உணர்வாக வந்த என்னை
உணவாக கொன்றாயே
உறவாக வளர்ந்த காதல்
உயிரற்று போனதடி..!

கரும்பான நம் காதல்
கசந்ததா உனக்கு மட்டும்..?
இரும்பான என் இதயம்
இழகியதே உன் பிரிவால்..!

விரும்பாத பெண் என்றால்
விளகிருப்பேன் எப்போதே...
வினையாக காதல் செய்து-என்
விதியே நானே அழித்துவிட்டேன்...!

வினையாக காதல் செய்து-என்
விதியே நானே அழித்துவிட்டேன்...!


Close (X)

21 (4.2)
  

புதிய படைப்புகள்

மேலே