ஆன்மீக அரசியல்
ஏகாதசியில்
பட்டினி இருந்த பாட்டி
பரமபதம் அடைந்து விட்டாள்
அரை வயிற்று கஞ்சிகூட இல்லாமல்
பசியிலும் பட்டினியிலும்
மடிந்து கொண்டிருகிறார்கள் மனிதர்கள்
இவர்களுக்கும் பரமபதம் கிடைக்குமா ?
இவர்களின் பரமபதம் கருதித்தான்
அரசியல்வாதிகள் ஒரு தீர்மானத்தில்
இருக்கிறார்களோ?
ஆன்மீக அரசியல் என்று
சொல்கிறார்களே
ஒருவேளை அது இதுதானோ
-----கவின் சாரலன்