ப்ரோ சிநேக்•••

நண்பர்-1-:- ஹல்லோ " சிநேக்" எப்படி இருக்க பாத்து ரொம்பநாளாச்சி

நண்பர்-2- :- என்ன நக்கலா

நண்பர்-1- :- ஏன் "சிநேக்" கோவமா பேசறே

நண்பர்-2-:- பேசரதா உன்ன ஒதைக்காமவிட்டதே என் தப்பு

நண்பர்-1-:- நான் அப்படி ஒன்னும் தப்பு தண்டாவா பேசலியே

நண்பர்-2-:- பேசலியா "சிநேக்"காடா நானு பாக்கிறதுக்கு" சிநேக்"கு மாதிரியா ஒன்னோட கண்ணுக்கு தெரியிறேன்

நண்பர்-1-:- ஏம்பா பிரதர்ங்கிறத ஷாட்டா" ப்ரோ" ன்னு கூப்பிடுறது இல்லையா அதேமாதிரி நான் தமிழ்ல சிநேகிதனை சுருக்கி "சிநேக்" ன்னு கூப்பிட்டது அவ்லோபெரிய தப்பா

நண்பர்-2-:- சற்று யோசித்துவிட்டு சாரி சாரி

நண்பர்-1-:-தப்புதான் நான் உன்னை விசாரிச்சது தப்பு தான்

நண்பர்-2-:-•••••••????


Close (X)

0 (0)
  

மேலே