அஞ்சர அஞ்சல

No.1 :- ஏங்க இப்போ மணி என்னங்க

No. 2 :- அஞ்சர

No. 1 :- நான் ஒன்னும் அஞ்சல மணிய சொல்லுங்க

No. 2 :- அஞ்சரன்னு சொன்னேனில்ல

No. 1 :- ஏங்க நான் அஞ்சலன்னு சொன்னேனில்ல

No. 2 :- நீ அஞ்சல இல்ல பஞ்சில இரு அத ஏன் ஏங்கிட்ட சொல்றே

No. 3 :- ஏங்க பொம்பளகிட்ட போயி என்ன வாக்குவாதம்

No. 2 :- ஒன்னும் இல்லங்க இந்தம்மாவந்து ஏங்கிட்ட மணி என்னான்னு கேட்டால்க

No. 3 :- சரி கேட்டாங்க அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க

No. 2 :- அவுங்க கேட்டப்போ மணி அஞ்சரங்க நானும் அஞ்சரன்னேன் நான் ஒன்னும் அஞ்சல மணிய சொல்லுங்கன்னாங்க

No. 3 :- ஓ•••• பிரச்சன அந்தம்மாகிட்டதான் இருக்கு நீங்க அஞ்சரன்னத மணிகேக்க அஞ்சுவது போல நான் ஒன்னும் அஞ்சல ன்னு அர்த்தத்தில சொல்லி இருக்காங்க அவுங்க அவுங்களோட பெயரை ஏன் சொல்றாங்கன்னு அவருக்கு ஒரு சந்தேகம் இந்தாம்மா கையை காட்டி இதுல எத்தன விரல் இருக்கு

No. 1 :- அஞ்சி வெரலு

No. 3 :- பிறகு ஒரு விரலை பாதிவிரலை காட்டி

No. 1 :- அரை வெரலு

No. 3 :- சேத்து சொல்லு

No. 1 :- அஞ்சிம் அப்பறம் ஒரு அரையும் இப்ப நீங்க எவ்லோ வெவரமா புட்டு புட்டு புரியறமாதிரி சொன்னீங்க மணிபாக்க தெரியாவனுக்கெல்லாம் கையில ஒரு கடிகாரம் கேடு

No. 2,3 :-•••••••••••!!!!


Close (X)

4 (4)
  

மேலே